For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழக வீரருக்கு எதிராக சதி? பிசிசிஐயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெளியே கசிந்த ரகசியம்!

Recommended Video

India set to play Day Night test in Australia

மும்பை : முன்னாள் தமிழக வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இந்திய அணியில் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு ஈமெயில் மூலமாக அனுப்பிய விண்ணப்பம் காணாமல் (?!) போன விவகாரத்தில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது.

பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறும் காரணங்கள் கேலிக்குரியதாக இருப்பதால், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பதவிக்கு வரக் கூடாது என திட்டமிட்டு இந்த வேலைகள் நடந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதாரம், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் வசம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறி உள்ளது.

வேடிக்கையான காரணங்கள்

வேடிக்கையான காரணங்கள்

அவர் அனுப்பிய விண்ணப்பம் அடங்கிய ஈமெயில், பிசிசிஐக்கு வரவே இல்லை எனவும், தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது எனவும், "ஸ்பாம்" எனப்படும் தேவையற்ற மெயிலாக வகைப்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் பல்வேறு வேடிக்கையான காரணங்கள் பிசிசிஐ அதிகாரிகள் சார்பாக கூறப்படுகிறது.

நியமனத்தில் தாமதம்

நியமனத்தில் தாமதம்

இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கடந்த நவம்பர் மாதமே தற்போது உள்ள எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினரின் காலம் முடிந்து விட்டது. மிக தாமதமாகவே அடுத்த தேர்வுக் குழுவை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மூன்று வீரர்கள்

மூன்று வீரர்கள்

அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகிய மூவர் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் வீரர்களும் முதல் வரிசையில் உள்ளனர். அதிக சர்வதேச போட்டிகள் ஆடிய வீரராக அஜித் அகர்கர் இருக்கிறார். அதிக வயது கொண்டவராக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இருக்கிறார்.

இறுதிப் பட்டியலில் இல்லை

இறுதிப் பட்டியலில் இல்லை

இவர்கள் இருவரில் ஒருவர் தான் தலைவர் பதவியில் அமர்வார் என் கூறப்படும் நிலையில், சிவராமகிருஷ்ணனின் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்று கூறி அவரது பெயரை இறுதிப் பட்டியலில் சேர்க்கவில்லை பிசிசிஐ. ஆனால், விண்ணப்பம் பெற அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதிக்கு இரு நாட்கள் முன்பே விண்ணப்பம் அடங்கிய ஈமெயிலை அனுப்பி இருக்கிறார் அவர்.

கடைசி தேதிக்கு முன்பே..

கடைசி தேதிக்கு முன்பே..

ஜனவரி 24 அன்று கடைசி தேதி எனும் நிலையில், ஜனவரி 22 மாலை 4.16 மணிக்கு சரியாக ஈமெயிலை அனுப்பி இருக்கிறார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அவர் விண்ணப்பத்தை குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் அனுப்பிய ஆதாரம் அவரது மெயிலில் உள்ளது.

பிசிசிஐ அதிகாரி தகவல்

பிசிசிஐ அதிகாரி தகவல்

இறுதிப் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், விண்ணப்பத்தை பெற வேண்டிய குறிப்பிட்ட பிசிசிஐ அதிகாரி, ஈமெயில் தேவையற்றதாக ஒதுக்கப்படும் ஸ்பாம் பகுதியில் அவரது விண்ணப்பம் இருந்ததாகவும், அது தற்போது கிடைத்து இருப்பதாகவும் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.

சொல்லப்பட்ட காரணங்கள்

சொல்லப்பட்ட காரணங்கள்

இனி அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பது தெரியவில்லை. அதே சமயம், முன்னதாக பிசிசிஐ அதிகாரிகள், அவரது மெயில் வரவே இல்லை என கூறியதும், தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது என்று கூறியதும், ஸ்பாம் ஆக குறிப்பிடப்பட்டு விட்டது என கூறியதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

21 விண்ணப்பங்கள் மட்டுமே

21 விண்ணப்பங்கள் மட்டுமே

தேர்வுக் குழு பதவிகளுக்கு விண்ணப்பம் பெற புதிய ஈமெயிலை உருவாக்கி இருந்தது பிசிசிஐ. அதில் 21 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் மொத்தமாக அங்கே 21 மெயில்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கும். இதை கண்காணித்து சரி பார்ப்பது மிக எளிதான வேலை.

எப்படி ஸ்பாம் ஆனது?

எப்படி ஸ்பாம் ஆனது?

மேலும், புதிய மெயிலில் ஸ்பாம் எனப்படும் பகுதிக்கு ஒரு தனிநபர் அனுப்பும் மெயில் செல்வது கடினம் என கூறப்படுகிறது. விளம்பர நோக்கத்திற்காக அனுப்பப்படும் மெயில்கள் மட்டுமே ஸ்பாம் என குறிக்கப்படும். அப்படி இருக்க லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் மெயில் எவ்வாறு ஸ்பாம் என குறிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுதாரித்த பிசிசிஐ

சுதாரித்த பிசிசிஐ

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் விண்ணப்பம் அளித்தும், அவர் பெயர் இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை என்ற செய்தி வெளியான பின்னரே பிசிசிஐ சுதாரித்து அவர் பெயரை மீண்டும் சேர்ப்பது பற்றி நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது. ஒருவேளை அந்த செய்தி வெளியாகவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் என்கிறார்கள்? இது குறித்து அறிந்த பிசிசிஐ அதிகாரிகள் சிலர். பிசிசிஐயில் இருக்கும் லாபிகள் தான் இந்த குழப்பத்துக்கு காரணமா?

Story first published: Sunday, February 16, 2020, 19:48 [IST]
Other articles published on Feb 16, 2020
English summary
Is Laxman Sivaramakrishnan application neglected purposefully?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X