For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா ஓய்வு முடிவு??.. கேப்டன்சி குழப்பங்களுக்கு பிசிசிஐ தந்த தீர்வு.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை: 2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் முழு கேப்டன்சி பொறுப்புகளையும் ஹர்திக் பாண்ட்யாவிடம் ஒப்படைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ரோகித் சர்மாவின் நிலைமையும் தெரியவந்துள்ளது.

இந்திய அணியில் கடந்த ஓராண்டு காலமாகவே கேப்டன்சி செய்வதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. 2022ல் 8 கேப்டன்கள் வரை இந்திய அணியை வழிநடத்திய சூழலில் 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் ரோகித் தான் கேப்டன் என அறிவிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது நடக்கும் விஷயங்களை பார்த்தால் டி20 அணி முழுவதுமாக ஹர்திக் பாண்ட்யாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராமல் உள்ளது.

“அது ஒன்னே போதும், நியாயம் ஜெயிக்க”.. ஹர்திக் பாண்ட்யாவுக்கு நடந்த அநீதி.. அஸ்வின் நறுக்கென்ற பதிவு!“அது ஒன்னே போதும், நியாயம் ஜெயிக்க”.. ஹர்திக் பாண்ட்யாவுக்கு நடந்த அநீதி.. அஸ்வின் நறுக்கென்ற பதிவு!

 உலகக்கோப்பை திட்டம்

உலகக்கோப்பை திட்டம்

டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாருமே டி20 அணிகளில் சேர்க்கப்படுவதே இல்லை. 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஹர்திக் தலைமையில் இளம் படை உருவாக்குவதாகவும் சீனியர்கள் இனி டி20 திட்டங்களில் இல்லை என பிசிசிஐ கூறியது. எனினும் பனிச்சுமையால் விலகியுள்ளோம், விரைவில் விளையாடுவோம் என வீரர்கள் முரண்பாடான பதிலை கொடுத்துள்ளனர்.

குழப்பங்களுக்கு முடிவு

குழப்பங்களுக்கு முடிவு

இந்நிலையில் கேப்டன்சி குழப்பங்களுக்கான தீர்வு என்னவென்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் வரையில் சீனியர் வீரர்கள் டி20 அணிகளில் பெரும்பாலும் சேர்க்கப்படமாட்டார்கள். அவர்களாகவே ஃபேர்வெல் போட்டி போன்று விளையாடிவிட்டு ஓய்வு பெறலாம். 50 ஓவர் உலகக்கோப்பை முடிந்த பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

36 வயதாகும் கேப்டன் ரோகித் சர்மா, வரவுள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு பின்னர் இந்த பொறுப்பையும் ஹர்திக் பாண்ட்யாவிடமே ஒப்படைக்கவுள்ளனர். இதற்காக தான் கே.எல்.ராகுலை துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை நியமித்தனர். ஆனால் டெஸ்ட் அணி அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

டெஸ்ட் கேப்டன்சி

டெஸ்ட் கேப்டன்சி

3 அணியையும் கொடுத்தால் பாண்ட்யாவுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், டெஸ்ட் கேப்டன்சியை மட்டும் கே.எல்.ராகுலின் கைகளில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர். ரிஷப் பண்ட்-க்கு இன்னும் அனுபவம் தேவை என்பதால் ராகுலை தற்போதைக்கு கேப்டனாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, January 21, 2023, 10:04 [IST]
Other articles published on Jan 21, 2023
English summary
Reports says Rohit sharma to announce retirement, BCCI is to put an end card for the Captaincy saga in Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X