For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷூவை அவிழ்த்து.. காதில் வைத்து.. தவானை அவமானப்படுத்தினாரா தென்னாப்பிரிக்க வீரர்? வெடித்த சர்ச்சை

Recommended Video

IND VS SA 3RD T20 | Kohli Hendricks clash | தென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி! ஐசிசி நடவடிக்கை..!

மும்பை : சமீபத்தில் நடந்த டி20 தொடரின் மூன்றாம் போட்டியில் இந்திய அணி வீரர் தவானை அவுட் ஆக்கிய தென்னாப்பிரிக்க வீரர் ஷம்சி தன் ஷூவை அவிழ்த்து காதில் வைத்து விக்கெட்டை கொண்டாடினார்.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. சிலர் ஷம்சி, தவானை அவமானப்படுத்தி இருக்கிறார் என கூறி வந்தனர்.

இதனால், இந்த சம்பவம் சர்ச்சை ஆன நிலையில், இதன் பின்னணி என்ன? ஏன் ஷம்சி அப்படி செய்தார் என்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

மூன்றாம் டி20 போட்டி

மூன்றாம் டி20 போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் அடித்த வீரர் தவான் மட்டுமே.

தவான் சிக்ஸர்

தவான் சிக்ஸர்

துவக்க வீரர் தவான் தன் பேட்டிங்கின் போது இரண்டு சிக்ஸர்கள் அடித்து இருந்தார். ஷம்சியின் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி அட்டாகசம் செய்தார் தவான்.

ஷம்சி விக்கெட் எடுத்தார்

ஷம்சி விக்கெட் எடுத்தார்

பின்னர் தவான் 36 ரன்கள் எடுத்த நிலையில், தன் இரண்டாவது ஓவரில் அவர் விக்கெட்டை வீழ்த்தினார். தவான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தன் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விரட்டிய தவானை வெளியேற்றி பழி தீர்த்தார் ஷம்சி.

ஷூவை வைத்து..

ஷூவை வைத்து..

விக்கெட் எடுத்த பின், தவான் வெளியேறிக் கொண்டு இருந்த போது, தன் ஷூவை கழற்றி காதில் வைத்து, விக்கெட் எடுத்ததை கொண்டாடினார் ஷம்சி. அந்த சம்பவம் சர்ச்சை ஆனது.

ஏன் செய்தார்?

ஏன் செய்தார்?

ஷம்சி ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு தொலைபேசியில் தான் விக்கெட் எடுத்தது குறித்து தெரிவிப்பதை போல பாவனை செய்யவே அப்படி செய்தாராம்.

இம்ரான் தாஹிர் தான் ஹீரோ

இம்ரான் தாஹிர் தான் ஹீரோ

இம்ரான் தாஹிர் தான் ஆடிய காலத்தில் உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தி நீண்ட காலம் தரவரிசையில் முன்னணியில் இருந்தார். அவர் தான் இளம் சுழற் பந்துவீச்சாளர் ஷம்சியின் "கிரிக்கெட் ஹீரோ".

ஷம்சி சமாதானம்

ஷம்சி சமாதானம்

ஷம்சி குறித்த சர்ச்சைகள் பேசப்பட்ட நிலையில், தான் போட்டி முடிந்த உடன் தவான் உடன் சிரித்து பேசும் புகைப்படத்தை வெளியிட்டு, எந்த அவமரியாதையும் இல்லை. வெறும் அன்பு மற்றும் கொண்டாட்டம் தான் என்று கூறி உள்ளார்.

முடிவுக்கு வந்தது

மேலும், ஏன் முன்பே சொல்லாமல் என் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்தீர்கள் என தவானிடம் கேட்டேன் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஷம்சி. இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

Story first published: Wednesday, September 25, 2019, 20:13 [IST]
Other articles published on Sep 25, 2019
English summary
Is Shamsi disrespect Shikar Dhawan after shoe celebration? Shamsi himself explains this controversy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X