ப்ளேயிங் 11-ஐ விட அதுதான் மிக முக்கியம்.. டி20 உலகக்கோப்பை நடந்த அதிசயம்.. கோலிக்கு முன் உள்ள சவால்!

அமீரகம்: நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் உள்ளது.

அச்சுறுத்தும் பனி பொழிவு.. புதிய பயிற்சியை தொடங்கிய Indian Team

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தற்போது கடும் நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை வென்றே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது.

 இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

 இந்திய அணி ஆட்டம்

இந்திய அணி ஆட்டம்

"பி" குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்திய அணிக்கு இன்னும் மீதம் 4 போட்டிகள் உள்ளன. இதில் பெரிய அணி என்றால் நியூசிலாந்து மட்டுமே. அதனை மற்றும் வீழ்த்திவிட்டல், அதன்பின்னர் ஸ்காட்லாந்து, ஆஃப்கானிஸ்தான், நமிபியா அணிகளை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு செல்லலாம். இதே வாய்ப்புகள் தான் நியூசிலாந்து அணிக்கும் உள்ளது இந்தியா மட்டுமே அந்த அணிக்கு சவாலான ஒன்று. எனவே இதில் வெற்றி பெறுபவர்கள் தான் அரையிறுதிக்கு செல்லும் 2வது அணியாக இருக்கும் . இப்படிபட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதியன்று நடைபெறுகிறது.

முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

இதில் இந்திய அணி வெற்றி பெறுமா என அனைவரும் ப்ளேயிங் 11-ஐ உற்று நோக்கி வருகின்றனர். இந்நிலையில் ஆட்டத்தை விட இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் டாஸ் வெல்வதே மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 7 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

குறிப்பாக 6 போட்டிகளில் பந்துவீச்சை தேர்வு செய்த அணியே அபார வெற்றிகளை உறுதி செய்துள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணி மட்டும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. எனினும் ஸ்காட்லாந்து அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது. எனவே அமீரக களத்தில் நிச்சயம் டாஸ் வெல்ல வேண்டியது அவசியமாகிறது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

விராட் கோலிக்கும் டாஸ் வெல்வதற்கும் ஏற்கனவே நிறைய சர்ச்சைகள் உள்ளன. கோலி இதுவரை பல்வேறு போட்டிகளில் டாஸில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவரை அதிர்ஷ்டம் இல்லாத கேப்டன் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். எனவே அடுத்து வரும் நியூசிலாந்து போட்டியிலாவது டாஸ் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Is this T20 World Cup is just about winning the toss ?? 7 out of 7 winning now
Story first published: Thursday, October 28, 2021, 13:49 [IST]
Other articles published on Oct 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X