For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. டாம் லேதமுக்கு பாடம் புகட்டிய இஷான் கிஷான்.. ஷாக் ஆன அம்பயர்கள்!

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் டாம் லேதம் செய்த தவறான விஷயத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி வாண வேடிக்கை காட்டியது.

ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் அட்டகாசமான இரட்டை சதம் அடிக்க அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக நின்றனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.

எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்

சர்ச்சை விக்கெட்

சர்ச்சை விக்கெட்

இந்திய அணியின் அதிரடி ஆட்டங்களுக்கு மத்தியில் டாம் லேதம் செய்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 40வது ஓவரின் போது டேரில் மிட்செல் வீசிய பந்தை ஹர்திக் பாண்ட்யா அடிக்க தவறவிட, அதனை விக்கெட் கீப்பர் டாம் லேதம் பிடித்தார். அப்போது பந்து பட்டது ஸ்டம்பில் என அவுட் கேட்கப்பட்டது. இதனை ரிவ்யூவ் செய்து பார்த்த 3வது நடுவரும் தவறான முடிவை வழங்கினார்.

அம்பயரின் முடிவு

அம்பயரின் முடிவு

உள்ளே சென்ற பந்து, ஸ்டம்புகளுக்கு மேலே தான் சென்றது. கீப்பர் டாம் லேதமின் கைகளுக்குள் சென்ற பிறகும் கூட ஸ்டம்புகளில் விளக்கு எறியவே இல்லை. ஆனால் லேதம் தான் கிளவுஸை ஸ்டம்புகளுக்கு மிகவும் அருகில் வைத்து தட்டிவிட்டார். இதனால் தான் விளக்கு எறிந்தது தெளிவாக தெரிந்தது. இதே செயலை சுப்மன் கில்லுடனும் முயற்சி செய்தார். ஆனால் அவர் பந்தை அடித்துவிட்டதால், லேதம் கைகளால் ஸ்டம்புகளை தட்டிவிடுவது அம்பலமானது.

இஷானின் பதிலடி

இஷானின் பதிலடி

இந்நிலையில் லேதமுக்கு தரமான பதிலடியை இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் கொடுத்துள்ளார். நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 16வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை டெவோன் கான்வே தடுப்பாட்டம் ஆடினார். அப்போது பின்னால் இருந்த ஸ்டம்ப்களில் விளக்கு எறிய, பெயில்கள் திடீரென கீழே விழுந்தது. ஹிட் விக்கெட் ஆகிவிட்டோரோ என அனைவரும் நினைத்தனர். இதற்கேற்றார் போல இஷான் கிஷானும் அப்பீல் செய்தார்.

உண்மையில் என்ன ஆனது?

உண்மையில் என்ன ஆனது?

இதனையடுத்து 3வது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், டாம் லேதம் ஸ்டம்புகளுக்கு அருகில் கூட செல்லவில்லை. இஷான் கிஷான் வேண்டுமென்றே கிளவுஸால் பெயில்களை தட்டிவிட்டு அவுட் கேட்டுள்ளார். இதனை நம்பி ஏமாந்த கள நடுவரும் 3வது நடுவருக்கு பரிந்துரைத்துள்ளார். இஷானின் இந்த செயலுக்கு ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், மற்றொருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Story first published: Wednesday, January 18, 2023, 20:31 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
Team India wicket keeper Ishan kishan gives a perfect reply to Tom latham over a controversial stumping in India vs new zealand 1st ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X