“ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபையரு”.. ஆசியக்கோப்பை குறித்து இஷானின் ஆதங்க பதிவு..ஏன் சேர்க்கப்படவில்லை?

மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் பேட்டிங்கில் அனுபவமான வீரர்களும், பவுலிங்கில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அது முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷான் ஆகியோர் தான்.

3 வீரர்கள் புறக்கணிப்பு

3 வீரர்கள் புறக்கணிப்பு

முகமது ஷமியின் வயதை கருத்தில் கொண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார். சிராஜ் சரியான ஃபார்மில் இல்லாததால் கடந்த சில தொடர்களில் இருந்து ஒதுக்கப்பட்டார். ஆனால் இஷான் கிஷான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை தற்போது புறக்கணித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி

பதிலடி

இந்நிலையில் இதற்கு இஷான் கிஷான் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், இந்தி பாடல் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதாவது " ஒரு விஷயம் வலியை கொடுக்கிறது என்பதற்காக அதற்கேற்றார் போல் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளாதீர்கள். யாராவது உங்களை 'பூ' ஆக கருதினால், நீங்கள் நெருப்பு என என்பதை உணர்த்துங்கள் பதிவிட்டுள்ளார்.

ஏன் நீக்கினர்

ஏன் நீக்கினர்

இந்திய அணியில் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கிற்கு உள்ளார். இதே போல நல்ல ஃபார்மில் இருக்கும், ஹர்திக், ரிஷப், தினேஷ் கார்த்திக் என அனைவரையும் ப்ளேயிங் 11ல் கொண்டு வருவதற்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஓப்பனிங் பயிற்சிகளை கொடுத்துள்ளனர். இதனால் தான் இஷான் கிஷான் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

 அட்டகாச ரெக்கார்ட்

அட்டகாச ரெக்கார்ட்

ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் ஆடிய இஷான் 418 ரன்களை குவித்தார். இதே போல நடப்பாண்டில் இதுவரை 14 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 449 ரன்களை விளாசியுள்ளார். அவரின் சராசரி 44.90 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ishan kishan's Instagram story abour asiacup 2022 ( ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ) ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து இஷான் கிஷான் மறைமுமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Story first published: Wednesday, August 10, 2022, 18:23 [IST]
Other articles published on Aug 10, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X