For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு போட்டோதான்.. இங்கிலாந்து தொடரில் புயலை கிளப்பிய ஐபிஎல் வீரர்.. உண்மையில் என்ன நடந்துச்சு?

சென்னை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வரும் இளம் வீரர் இஷான் கிஷான் செய்த டிவிட் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியில் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்காக தற்போது புதிய இரண்டு டெஸ்டிங் முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை உட்பட இரண்டு விதமான சோதனைகள் வைக்கப்படுகின்றன.

யோ யோ டெஸ்ட் என்பது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். கடைசி சுற்று வரை வேகத்தை அதிகரித்து அதிகரித்து நிற்காமல் ஓட வேண்டும். இதில் வெற்றிபெற குறைந்தது 17.1 புள்ளிகள் பெற வேண்டும்.

இன்னொரு டெஸ்ட்

இன்னொரு டெஸ்ட்

இன்னொரு பக்கம் புதிதாக கடினமான டெஸ்ட் ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி 2 கிலோ மீட்டர் தூரத்தை வீரர்கள் எவ்வளவு வேகமாக கடக்கிறார்கள் என்று சோதனை செய்யப்படும். இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 2 கிமீ தூரத்தை 8.15 நிமிடத்தில் கடக்க வேண்டும். இன்னொரு பக்கம் பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள், ஸ்பின் பவுலர்கள் 8.30 நிமிடத்தில் இந்த தூரத்தை கடக்க வேண்டும்.

பதற்றம்

பதற்றம்

இந்த டெஸ்ட்தான் இந்திய இளம் வீரர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இந்த டெஸ்டில் வெற்றிபெறுவது பல இளம் வீரர்களுக்கே கடினமான காரியமாக மாறியுள்ளது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் , நிதிஷ் ராணா, ராகுல் திவாதியா, சித்தார்த் கவுல், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இந்த 2 கிமீ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளனர். தேசிய கிரிக்கெட் அகாடமி இங்கிலாந்து டி 20 தொடருக்காக இன்று நடந்த டெஸ்டில் இவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

மீண்டும்

மீண்டும்

இவர்களுக்கு மீண்டும் இந்த டெஸ்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் இந்த டெஸ்டில் நான் தோல்வி அடையவில்லை, வெற்றிபெற்றுவிட்டேன் என்று இஷான் கிஷான் குறிப்பிட்டுள்ளார். 2 கிமீ சோதனையில் நான் வெற்றிகரமாக பாஸாகிவிட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் இஷான் கிஷான் குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொன்னார்

இவர் தோல்வி அடைந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது திடீரென பாஸாகிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் உண்மையில் இவர் பாஸாகிவிட்டாரா இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது . இஷான் கிஸானின் இந்த இன்ஸ்டாகிராம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, February 12, 2021, 17:42 [IST]
Other articles published on Feb 12, 2021
English summary
Ishan Kishan says he has passed the new fitness test created by BCCI for England series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X