For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்பட போகிறார் என்ற குழப்பம் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக தெரிகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் வரவுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்கு மார்ச் 13ம் தேதி அகமதாபாத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த போட்டிக்காக பிப்ரவரி 1ம் தேதியே இந்தியாவுக்கு வந்தடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் இந்திய அணியினரும் நாக்பூரில் முகாமிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்.. இந்திய வீரர்கள் அடித்த டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்.. முழு பட்டியல் இதோஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்.. இந்திய வீரர்கள் அடித்த டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்.. முழு பட்டியல் இதோ

ப்ளேயிங் 11 சிக்கல்

ப்ளேயிங் 11 சிக்கல்

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 தேர்வில் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது விக்கெட் கீப்பர் இடம் தான். இந்தியாவின் மிடில் ஆர்டரில் தூண் போல ஆடியவர் ரிஷப் பண்ட் தான். ஆனால் அவரால் இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் முதன்மை தேர்வாக இருந்தவர் கே.எல்.ராகுல் தான். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு தரமாட்டோம் என கூறிவிட்டனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலுக்கு கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுவிட்டன. டெஸ்ட் கிரிக்கெட் போன்ற பெரிய போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்தால் மேலும் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை திட்டத்தில் அவர் இருப்பதால், பணிச்சுமையை குறைப்பது முக்கியமானதாகும். இதற்காக அவரை பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர்.

 கடும் போட்டி

கடும் போட்டி

இந்நிலையில் தற்போது விக்கெட் கீப்பிங் இடத்திற்காக இஷான் கிஷான் மற்றும் கே.எஸ்.பரத் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவருமே இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவே இல்லை. இஷான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் சூழலில் கே.எஸ்.பரத் 1.5 வருடங்களாக வாய்ப்புக்காக காத்துக்கொண்டுள்ளார். கே.எஸ்.பரத் கடந்த 2021 மே மாதம் அறிமுகமாகியும், பெஞ்சிலேயே அமர்ந்துள்ளார்.

யார் சிறந்தவர்?

யார் சிறந்தவர்?

முதல் தர கிரிக்கெட்டில் இஷான் கிஷான் 48 போட்டிகளில் விளையாடி 2,985 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும். மறுபுறம் கே.எஸ்.பரத் 86 போட்டிகளில் விளையாடி 4,707 ரன்களை அடித்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும். அதன்படி பார்த்தால் இஷானை விட கே.எஸ்.பரத்-க்கு உள்நாட்டு போட்டிகள் அனுபவம் அதிகம் உள்ளன. ஆனால் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி பண்ட்-ஐ போலவே செயல்படுவார்.

Story first published: Monday, February 6, 2023, 11:42 [IST]
Other articles published on Feb 6, 2023
English summary
Rohit sharma in confusion over Ishan kishan vs KS Bharat to select wicket keeper for India vs Australia 1st Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X