For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் இஷாந்த் 3 விக்கெட்கள் வீழ்த்திய ரகசியம்.. காரணம் கவுன்டி போட்டிகளில் ஆடிய அனுபவம்!

By Aravinthan R

பிர்மிங்ஹாம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார், இஷாந்த் சர்மா. டெஸ்ட் போட்டிகளில், எட்டாவது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினார்.

இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு, கவுன்டி போட்டிகளில் தான் பங்கேற்று விளையாடியதுதான் காரணம் என தெரிவித்துள்ளார் இஷாந்த் சர்மா. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, அதில் பங்கேற்காமல் கவுன்டி போட்டிகளில் சசக்ஸ் அணிக்காக ஆடி வந்தார் இஷாந்த். அப்போது நான்கு போட்டிகளில் 15 விக்கெட்களும், ஒரு அரைசதமும் அடித்து இருந்தார். அதன் அடிப்படையில் இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றார்.

ishant sharma says the county experience helping him to bowl well


வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் காயத்தால் ஆட முடியாத நிலையில் இருக்க, அனுபவ வீரர் என்ற அடிப்படையில் இஷாந்த் சர்மா மீது அழுத்தம் இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது, ஒரே இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்கள் எடுத்து கலக்கி இருக்கிறார், இஷாந்த். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, “கவுன்டி கிரிக்கெட்டில் ஆடியது எனக்கு மிகவும் உதவியது. ஐபிஎல்-இல் ஆடாதது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், எது நடந்தாலும் அது நம் நன்மைக்கே என எண்ணினேன்” என்றார்.

மேலும், “நான் சசக்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளிலும், சில ஒருநாள் போட்டிகளிலும் ஆடினேன். நல்ல விஷயமாக நான் 250 ஓவர்கள் பந்து வீசினேன். நாட்டுக்காக ஆடி, வெளிநாட்டில் ஐந்து விக்கெட்கள், அதுவும் இரண்டாவது இன்னிங்க்ஸில் எடுப்பது மிகவும் நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார் இஷாந்த் சர்மா.

இரண்டாவது இன்னிங்க்ஸில், இஷாந்த் சர்மா பந்து வீசி ஒரே ஓவரில், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகிய மூவரையும் வீழ்த்தினார். ஆசியாவுக்கு வெளியே ஒரே ஓவரில் மூன்று விக்கெட் எடுக்கும் இரண்டாவது இந்திய வீரர் ஆவார் இஷாந்த் சர்மா. இதற்கு முன், இந்த சாதனையை செய்தது முன்னாள் கேப்டன் மற்றும் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே ஆவார்.


Story first published: Saturday, August 4, 2018, 18:06 [IST]
Other articles published on Aug 4, 2018
English summary
Ishant Sharma says the county experience helping him in the ongoing test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X