For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷாந்த் நல்லா பந்து வீசுறாப்ல.. ஆனா விக்கெட் எடுக்க முடியலையேப்பா.. கபில்

இஷாந்த் சர்மா நல்ல திறமையான பந்து வீச்சாளராக இருந்தாலும் கூடஅவரால் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் பந்து வீச முடியாமல் இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

டெல்லி: இஷாந்த் சர்மா நன்றாகப் பந்து வீசுகிறார். நல்ல திறமைசாலியும் கூட. ஆனால் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் அவரால் பந்து வீச முடியவில்லை என்று கூறியுள்ளார் கபில் தேவ்.

விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தும் வகையில் பந்து வீசும் லாவகம் கபில்தேவிடம் இல்லை என்றும் கபில்தேவ் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை சிக்குன்குன்யா காய்ச்சல் காரணமாக இழந்த இஷாந்த் சர்மா, நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளவுள்ளார்.

72 டெஸ்ட் - 209 விக்கெட்கள்

72 டெஸ்ட் - 209 விக்கெட்கள்

இஷாந்த் சர்மா 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 209 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 66.6 ஆக உள்ளது. அதாவது ஒரு விக்கெட் எடுக்க இவருக்கு கிட்டத்தட்ட 11.5 ஓவர் தேவைப்படுகிறது.

நல்ல திறமைதான்.. இல்லைங்கலை!

நல்ல திறமைதான்.. இல்லைங்கலை!

இந்த நிலையில் இஷாந்த் சர்மா குறித்து கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இஷாந்த் சர்மா திறமையானவர்தான். அதில் சந்தேகம் இல்லை. அருமையான வேகப் பந்து வீச்சாளர். நல்ல உயரமும் அவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது.

விக்கெட் எடுக்கனுமே

விக்கெட் எடுக்கனுமே

ஆனால் விக்கெட் வீழ்த்துவதில் அவர் சரிவில்தான் இருக்கிறார். நெருக்கடியான நேரத்தில் விக்கெட் வீழ்த்த வேண்டும். அதுதான் முக்கியமானது. அவசியமானதும் கூட. ஆனால் அதில் இஷாந்த் தடுமாறுகிறார். அவரிடம் திறமை இருந்தாலும் கூட விக்கெட்டை வீழ்த்தும் திறமை மிஸ் ஆகிறது.

நல்ல லைன்.. லென்த் அவசியம்

நல்ல லைன்.. லென்த் அவசியம்

ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் தொடர்ந்து நல்ல லைன், லென்த்தில் அவர் பந்து வீசுவது அவசியம். நல்ல டெலிவரி கொடுப்பதை விட லைன், லென்த்தான் முக்கியமானது.

கஷ்ட காலம் பாஸ்!

கஷ்ட காலம் பாஸ்!

இப்போது முன்பு போல இல்லை கிரிக்கெட். வருடத்திற்கு 10 மாதம் விளையாடுகிறார்கள். காயம் சர்வசாதாரணமாகி விட்டது. அனைத்து வகை விளையாட்டிலும் ஜொலிப்பது என்பது சாமானியமானது இல்லை. எனவே ஒரு ஆல் ரவுண்டர் டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து சாதிப்பது என்பது மிகக் கடினமானதாகும் என்றார் கபில் தேவ்.

Story first published: Tuesday, November 8, 2016, 11:37 [IST]
Other articles published on Nov 8, 2016
English summary
Former India captain Kapil Dev feels that despite all his talent, speedster Ishant Sharma lacks the ability to bowl "wicket-taking deliveries" more consistently.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X