வின்னிங் டீம்ல இருந்தது மகிழ்ச்சி... திரும்பவும் என்னோட குடும்பத்தோட ஜாய்ன் ஆகியிருக்கேன்..

டெல்லி : இங்கிலாந்துடனான 3 வடிவங்களிலான தொடர்களிலும் விளையாடி கோப்பைகளை வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி.

கடந்த டி20 தொடரில் இடம்பெற்று 4வது போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.

தற்போது அவர் ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். மீண்டும் தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

3 தொடர்களிலும் இந்தியா வெற்றி

3 தொடர்களிலும் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்களில் மூன்றையும் வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி முதலில் ஆடப்பட்ட டெஸ்ட் தொடரில் 3க்கு 1 என்ற கணக்கிலும் அடுத்ததாக டி20 தொடரில் 3க்கு 2 என்ற கணக்கிலும் மூன்றாவதாக ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டுள்ளது.

சிறப்பாக செயல்பட்ட சூர்யா

சிறப்பாக செயல்பட்ட சூர்யா

இந்த மூன்று தொடர்களிலும் இளம் மற்றும் புதிய வீரர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செய்லபட்ட சூர்யகுமார் யாதவிற்கு கடந்த டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் தன்னை நிரூபித்து 4வது போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

பெருமையாக இருந்ததாக மகிழ்ச்சி

பெருமையாக இருந்ததாக மகிழ்ச்சி

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்காக விளையாடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும்வகையில் இன்றைய தினம் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளனர்.

குடும்பத்துடன் இணைந்துள்ளேன்

குடும்பத்துடன் இணைந்துள்ளேன்

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் வலைதளத்தில் பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்காக விளையாடுவது தனது கனவு என்றும் அதிசயத்தக்க வகையில் அமைந்துள்ள இந்திய அணியில் இடம்பெற்று விளையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும், தற்போது தன்னுடைய குடும்ப அணியுடன் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I am very happy and proud to represent Team India -Suryakumar Yadav
Story first published: Monday, March 29, 2021, 14:48 [IST]
Other articles published on Mar 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X