For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியை பாக்கறது, பாராட்டறது எல்லாமே உற்சாகத்தை கொடுக்கக்கூடியது... வில்லியம்சன் மகிழ்ச்சி

வெல்லிங்டன் : விராட் கோலியை பின்தொடர்வது, பார்ப்பது மற்றும் பாராட்டுவது அனைத்துமே மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேற்கொள்ளும் செயல்களால் சக மனிதராக விராட் கோலியை தான் மிகவும் பாராட்டுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிளேயிங் லெவனில் பாண்ட்யாவா? அக்சர் படேலா? சார்... இதுக்கு ரஹானேவின் ஷாக் ரியாக்ஷனை பாருங்க! பிளேயிங் லெவனில் பாண்ட்யாவா? அக்சர் படேலா? சார்... இதுக்கு ரஹானேவின் ஷாக் ரியாக்ஷனை பாருங்க!

மேலும் விராட் கோலியுடன் பேசுவதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி

கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி

இந்திய கேப்டன் விராட் கோலியை பார்ப்பது, அவரை பின்தொடர்வது மற்றும் பாராட்டுவது ஆகிய அனைத்துமே மகிழ்ச்சியை அளிப்பதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய செயல்பாடுகளால் சக மனிதராக சிறப்பாக செயல்பட்டு வருதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டை சிறப்பாக வழிநடத்துகிறார்

கிரிக்கெட்டை சிறப்பாக வழிநடத்துகிறார்

மேலும் விராட் கோலியுடன் பேசுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கிரிக்கெட்டை சிறப்பாக நடத்தி செல்வது மற்றும் அதற்காக அவர் அளிக்கும் திறன் ஆகியவையும் தன்னை மிகவும் கவர்ந்து வருவதாகவும் கேன் வில்லியம்சன் மேலும் கூறினார்.

தொடர் வெற்றிகளுக்கு காரணம்

தொடர் வெற்றிகளுக்கு காரணம்

கடந்த பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம், சதம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து அணியின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தார் கேன் வில்லியம்சன். இடையில் தனது குழந்தை பிறப்பையொட்டி ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்காமல் இருந்தார்.

இறுதிப்போட்டிக்கு

இறுதிப்போட்டிக்கு

இந்நிலையில் இந்த இரண்டு தொடர் வெற்றிகளை அடுத்து வரும் ஜூன் 18ம் தேதி லார்ட்சில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தேர்வாகியுள்ளது. நியூசிலாந்துடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளில் ஒரு அணி மோதுவதற்கு சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

Story first published: Thursday, February 4, 2021, 12:21 [IST]
Other articles published on Feb 4, 2021
English summary
I admire more Virat as a person, the way he conduct things and great to chat with him -Williamson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X