For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தற்போதைய சூழல்ல இந்திய அணிக்கு திரும்புறது தோனிக்கு கடினமா ஆயிடுச்சு... வெங்கடேஷ் பிரசாத்

டெல்லி : தற்போதைய சூழலில் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் இடம்பெறுவது மிகவும் சிரமமானது என்று முன்னாள் பௌலர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

List of Players Who Were supported By Dhoni

கடந்த ஒரு ஆண்டாக அவர் இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், மீண்டும் இடம்பெறும் ரசிகர்களின் கனவை அவர் நிறைவேற்றுவது கடினம் என்றும் பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு தோனி மிக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Its very tough now for MS Dhoni to make a comeback, -Venkatesh Prasad

தற்போதைய சூழலில் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் தோனி திரும்புதல் என்பது மிகவும் கடினமானதாக மாறியுள்ளதாக முன்னாள் இந்திய பௌலர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடாத நிலையில், அணியில் மீண்டும் பங்கேற்று அவர் விளையாட வேண்டும் என்ற ரசிகர்களின் கனவை நனவாக்குவது கடினம் என்றும் பிரசாத் கூறியுள்ளார்.

தோனி பிட்னசுடன் இருப்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ள பிரசாத், ஆனால் 40 வயதை நெருங்கும் நிலையில், அவரால் முன்பை போல சிறப்புடன் செயல்பட முடியாது என்றும் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அணியில் அவரது தேர்வு குறித்து முடிவு செய்ய வேண்டியது அணியின் நிர்வாகத்தை சேர்ந்தது என்றும் பிரசாத் மேலும் தெரிவித்துள்ளார்.

தோனி.. ஏன் இப்படி பண்றீங்க? தலையை சொறியும் பவுலர்கள்.. சைலன்ட்டாக காலி செய்யும் தல.. சிஎஸ்கே ரகசியம்தோனி.. ஏன் இப்படி பண்றீங்க? தலையை சொறியும் பவுலர்கள்.. சைலன்ட்டாக காலி செய்யும் தல.. சிஎஸ்கே ரகசியம்

ஆனால் தோனியை தேர்ந்தெடுக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்தால், அவரை ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பவராக மட்டுமே கருதாமல், நடுநிலை ஆட்டக்காரராக அதாவது 4 மற்றும் 5வது இடங்களில் இறக்கி விளையாட வைக்கலாம் என்றும் பிரசாத் கூறியுள்ளார். தான் இந்த முடிவையே எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, 10 ஓவர்கள் மட்டுமே உள்ளது என்ற நிலையில், ஆட்டத்தை முடித்து வைக்க தோனியை களமிறக்கும் முடிவை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் தோனி சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 14, 2020, 16:10 [IST]
Other articles published on May 14, 2020
English summary
It's very tough for him to really break into the team -Venkatesh Prasad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X