For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிரோடு இருக்க காரணம்… அந்த திக் திக்.. 30 விநாடிகள்.. அதிர்ச்சி விலகாத தமிம் இக்பால்

டாக்கா: அந்த முப்பதே... 30 விநாடிகள் தான்.. எங்கள் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி இருக்கிறது என்று வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் கூறினார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் மசூதிகளில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச வீரர்கள் நூலிழையில் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். அந்த தாக்குதலில் மொத்தம் 50 பேர் பலியாகினர்.

உலகம் முழுதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அந்த துப்பாக்கிச்சூடு நடந்த மசூதிக்கு சென்று கொண்டிருந்த வங்க தேச கிரிக்கெட் அணியினர் உயிர் தப்பினர்.

கிரிக்கெட் ரசிகர்களே... நாளை முழு ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்... ஹேப்பியா? கிரிக்கெட் ரசிகர்களே... நாளை முழு ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்... ஹேப்பியா?

ரத்து, ஒப்புதல்

ரத்து, ஒப்புதல்

தாக்குதல் சம்பவத்தையடுத்து, நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதற்கு ஐசிசியும் ஒப்புதல் அளித்தது.

அந்த தருணங்கள்

அந்த தருணங்கள்

இந் நிலையில் வங்கதேச இடது கை தொடக்க வீரர் தமிம் இக்பால் அந்த தருணங்கள் எப்படி இருந்தது என்பதை விவரித்துள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சில விஷயங்கள்

சில விஷயங்கள்

பேருந்தில் ஏறி மசூதி செல்லும் முன்பாக நடந்த விஷயங்கள்தான் எங்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. பொதுவாக முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா மதப்பிரச்சாரத்தை கேட்பதில் அதிக ஆர்வமுள்ளவர்கள். அதனால் ஜும்மா மசூதிக்கு முன்னதாகவே செல்ல நினைத்தோம்.

பேருந்து பயணம்

பேருந்து பயணம்

பேருந்து மதியம் 1.30 மணிக்கு தயாராக இருந்தது. ஆனால் மஹமுதுல்லாவோ செய்தியாளர்கள் கூட்டத்துக்கு சென்று விட்டு, ஓய்வறை திரும்பினார். ஓய்வறையில் தைஜுல், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் கால்பந்து ஆடினர்.

விளையாடினோம்

விளையாடினோம்

அந்த நிமிடங்களை அவர் அதிகப்படுத்தி விளையாடினர். அந்த சமயம் தான்... அந்த சிறு விஷயங்கள் தான் எங்களது உயிர்களை காப்பாற்றி இருக்கிறது.

தொழுகைக்காக பயணம்

தொழுகைக்காக பயணம்

அதன் பிறகு பேருந்தில் ஏறி சென்றோம். தொழுகை முடிந்து விடுதிக்கு செல்வது என்பது திட்டம். அதனால்தான் ஸ்ரீநிவாஸ், சவுமியா சர்க்கார் இருவரும் உடன் இருந்தனர்.

திடீர் பதற்றம்

திடீர் பதற்றம்

நான் எப்போதும் பேருந்தில் இடது புறத்தில் உள்ள 6ம் சீட்டில் உட்கார்வேன். மசூதியை பேருந்து நெருங்கும் போது வலது புறத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியே பதற்றத்துடன் பார்க்கத் தொடங்கினர்.

சடலம்

சடலம்

நான் பார்த்த போது சடலம் ஒன்று தரையில் கிடந்தது. பேருந்து சென்று கொண்டே இருந்தது. பின்னர் மசூதி அருகே நின்றது. ஆனால் எல்லோரும் அந்த சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

பெண்மணி சத்தம்

பெண்மணி சத்தம்

பேருந்தும் நிற்காமல் மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே நின்றது. அப்போது அங்கிருந்த பெண்மணியுடன் ஓட்டுநர் பேசினார், அந்தப் பெண் துப்பாக்கியால் சுடுகிறார்கள் போக வேண்டாம் என்று அலறினார்.

கதவுகள் மூடப்பட்டன

கதவுகள் மூடப்பட்டன

ஏதோ கலவரம், வன்முறை என்று நினைத்து, அங்கிருந்து கிளம்புவோம் என்றோம். ஆனால் ஓட்டுநரோ நகரவில்லை. எல்லோரும் சத்தம் போட்டோம். பேருந்தின் இரு கதவுகளும் மூடப்பட்டிருந்தன.

8 நிமிடங்கள் தான்

8 நிமிடங்கள் தான்

பதற்றத்தில் கதவை அடித்து உடைக்க முயன்றவுடன் ஓட்டுநர் திறந்தார். 8 நிமிடங்களில் பேருந்தில் இருந்து வெளியேறினோம். மரணத்தை நேரில் பார்த்ததை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.

அழுதேவிட்டோம்

அழுதேவிட்டோம்

ஓட்டலுக்குத் திரும்பி துப்பாக்கிச்சூடு வீடியோவை பார்த்து அழுதே விட்டோம். அன்றைய இரவில் எங்களுக்கு தூக்கமில்லை. கண்களை மூடினாலே அந்தக் காட்சிதான் வந்து போனது.

30 விநாடிகள் காப்பாற்றியது

30 விநாடிகள் காப்பாற்றியது

நாடு திரும்பும் போது நாங்கள் ஒவ்வொருக்கு ஒருவர் நடந்தவற்றை பேசிக் கொண்டோம். அந்த முப்பதே... 30 விநாடிகள் தான்.. எங்கள் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி இருக்கிறது என்று கூறினார்.

Story first published: Sunday, March 17, 2019, 18:29 [IST]
Other articles published on Mar 17, 2019
English summary
It was just a matter of 30 seconds says Bangladesh cricket player tamim Iqbal about newzealand attack.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X