For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பந்த்தை துவக்க ஆர்டர்ல அனுப்புனது சூப்பர் ப்ளான்... இன்சமாம் பாராட்டியிருக்காரு!

கராச்சி : கடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ரோகித், விராட் ஆகிய வீரர்கள் நிலையான ஆட்டத்தை அளிக்காத நிலையில் ரிஷப் பந்த் துவக்க ஆர்டரில் களமிறங்கி விளையாடினார்.

அணியின் கேப்டனுக்கே கொரோன உறுதி....மகளிர் கிரிக்கெட் அணி அதிர்ச்சி....தற்போதைய நிலை என்ன? அணியின் கேப்டனுக்கே கொரோன உறுதி....மகளிர் கிரிக்கெட் அணி அதிர்ச்சி....தற்போதைய நிலை என்ன?

இந்நிலையில் விராட் கோலியின் இந்த முடிவு சிறப்பானது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிரடி ரிஷப் பந்த்

அதிரடி ரிஷப் பந்த்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கை வெளிப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பந்த்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக அமைந்தது.

ரிஷப் பந்த்தே வித்தியாசம்

ரிஷப் பந்த்தே வித்தியாசம்

அடுத்தடுத்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறைவான ரன்களில் அவுட்டான நிலையில் அவர் ஷிகர் தவானுடன் இணைந்து ஆடி 78 ரன்களை அதிரடியாக அடித்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டு சென்றார். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் ரிஷப் பந்த் மட்டும்தான் என்று இன்சமாம் பாராட்டியுள்ளார்.

தற்போது ரிஷப்

தற்போது ரிஷப்

மேலும் கடந்த 70களில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்ற அணிகளில் இருந்து வித்தியாசப்பட விவியன் ரிச்சர்ட்ஸ் காரணமாக இருந்தது போல இப்போது ரிஷப் பந்த் சிறப்பான வீரராக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கடந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் சிறப்பாக ஆடியதையும் இன்சமாம் சுட்டிக் காட்டியுள்ளார்.

கேப்டனின் சிறப்பான முடிவு

கேப்டனின் சிறப்பான முடிவு

அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ரிஷப்பை களமிறக்கியது கேப்டன் விராட் கோலியின் சிறப்பான முடிவு என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த நேரத்தின் நெருக்கடியை ரிஷப் பந்த் சிறப்பாக நீக்கியதாகவும் இன்சமாம் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 30, 2021, 15:38 [IST]
Other articles published on Mar 30, 2021
English summary
Pant played an important role in releasing the pressure -Insamam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X