அணி என்மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்த வேண்டியிருந்துச்சு... மனம்திறந்த விஹாரி

டெல்லி : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்ய பெரிதும் உதவினார் ஹனுமா விஹாரி.

அதற்கு முந்தைய இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் 3வது போட்டியில் காயத்திற்கு இடையில் இவரது ஆட்டம் பெரிதும் பாராட்டுக்கு உள்ளானது.

சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!

இந்நிலையில் காயம் இருந்தபோதிலும், தன்மீது அணி வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு இருந்ததாக விஹாரி தெரிவித்துள்ளார்.

டிரா ஆன 3வது போட்டி

டிரா ஆன 3வது போட்டி

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் ஹனுமா விஹாரி. காயத்தால் நிற்க கூட முடியாமல் இருந்த போதும் அவர் நின்று ஆடி அந்த போட்டியை டிரா செய்தார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றி கொள்ள இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

நம்பிக்கை வைத்த அணி

நம்பிக்கை வைத்த அணி

இந்நிலையில் காயத்தால் அந்த போட்டியில் தன்னால் பேட்டிங் செய்வது மட்டுமின்றி நிற்கக்கூட சிரமப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளார் விஹாரி. அதற்கு முந்தைய இரு போட்டிகளில் தான் சிறப்பாக ஆடாத நிலையில் தன்மீது நம்பிக்கை வைத்து அதுகுறித்து அணி நிர்வாகம் எதுவும் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டிராவிட், லஷ்மன் பாராட்டு

டிராவிட், லஷ்மன் பாராட்டு

இதனால் வலி இருந்தபோதிலும் 3வது போட்டியில் சிறப்பான கவனம் கொண்டு தான் விளையாடியதாகவும், தன் மீதான நம்பிக்கையை தான் நிரூபித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆட்டத்தை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லஷ்மன் தன்னை பாராட்டி மெசேஜ் செய்திருந்ததையும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஹானேவின் பாராட்டு

ரஹானேவின் பாராட்டு

கேப்டன் ரஹானேவும் தன்னை வெகுவாக பாராட்டியதாகவும், கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சதத்தை காட்டிலும் சிட்னி போட்டியின் செயல்பாடு சிறப்பானது என்று அவர் கூறியதாகவும் விஹாரி மேலும் கூறினார். அந்த நேரத்தில் சிட்னியில் ஆடிய ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் மிக்கது என்று அவர் பாராட்டியதாகவும் விஹாரி தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rahul sir & Laxman sir messaged me after the SCG saying it was a great effort -Vihari
Story first published: Thursday, January 21, 2021, 16:51 [IST]
Other articles published on Jan 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X