For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிட்ச் பத்தி இப்பல்லாம் பேசறதே இல்ல... எப்படி சிறப்பா விளையாடறதுன்னு யோசிக்கறோம்... லீச் உறுதி

அகமதாபாத் : அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள 3வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் குறித்து தொடர் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிட்ச் குறித்து இங்கிலாந்து வீரர்களை காட்டிலும் மீடியாவில் அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதாக அந்த அணியின் ஸ்பின்னர் ஜாக் லீச் தெரிவித்துள்ளார்.

சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு! சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு!

மேலும் தற்போது பிட்ச் குறித்து ட்ரஸ்ஸிங் ரூமில் பேசப்படுவதில்லை என்றும் தங்களது போட்டிகளை எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்பது குறித்தே வீரர்கள் யோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3வது போட்டி நடைபெற்ற அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

நடந்ததை அறிய விரும்புகிறோம்

நடந்ததை அறிய விரும்புகிறோம்

இந்நிலையில் பிட்ச் குறித்து தாங்கள் குறை கூறவில்லை என்றும் மாறாக கடந்த போட்டி எவ்வாறு 2 நாட்களில் முடிக்கப்பட்டது என்பது குறித்து தெரிந்தால் அடுத்த போட்டியை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர் ஜாக் லீச் கூறியுள்ளார்.

சிறப்பாக விளையாட யோசனை

சிறப்பாக விளையாட யோசனை

மேலும் இங்கிலாந்து வீரர்களை காட்டிலும் மீடியாவில் பிட்ச் குறித்து அதிகமாக பேசப்படுவதாகவும் ஆனால் தற்போது தாங்கள் அதுகுறித்தெல்லாம் யோசிக்காமல் எவ்வாறு 4வது போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்று யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

விஷயங்களை கற்க விருப்பம்

விஷயங்களை கற்க விருப்பம்

கடந்த 3 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜாக் லீச். இந்நிலையில் பிட்ச் குறித்து தான் பேச எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் ஆனால் தான் நெருக்கடி சூழல்களிலும் புதிய விஷயங்களை கற்கவே விரும்புவதாகவும் லீச் கூறியுள்ளார்.

18 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள்

18 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள்

கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி 112 மற்றும் 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டி 2 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் ரவி அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இருவரும் இணைந்து 18 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Tuesday, March 2, 2021, 12:12 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Leach said his side is focused on setting things right in the 4th Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X