For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர உலக கோப்பைக்கு எடுக்கலனா… அதை விட காமெடி எதுவுமே இல்ல.. தினேஷ் கார்த்திக்கை ஆதரிக்கும் அவர்

மும்பை:உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டுமென கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.

உலக கோப்பை வரும் மே 30 முதல் ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அந்த தொடருக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணித் தேர்வு அடுத்த வாரம் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்படவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதே போலவ, ஏப்ரல் 23-க்கு முன்பு, அணிகள் வீரர்களின் பட்டியலின் வெளியிடவேண்டும்.

 ராஜஸ்தான் அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும்... சென்னை கேப்டன் தோனி கருத்து ராஜஸ்தான் அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும்... சென்னை கேப்டன் தோனி கருத்து

மாற்றலாம்

மாற்றலாம்

போட்டி தொடங்குவதற்கு 7 நாள்களுக்கு முன்புவரை அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம். பின்னர் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் உலக கோப்பை தொழில்நுட்ப குழுவின் அனுமதி பெறவேண்டும்.

கட்டுக்கோப்பு

கட்டுக்கோப்பு

இந்நிலையில் இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் இந்த ஐபிஎல் தொடரில் கட்டுக்கோப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக ராகுல், ராயுடு, தினேஷ் கார்த்திக் போன்றவர்களை கூறலாம்.

இருவரில் ஒருவர்

இருவரில் ஒருவர்

ரிஷப் பண்டுடன் போட்டி போட்டும் தினேஷ் கார்த்திக் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் இந்த வருடம் விளையாடி வருகிறார். இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்கிற நிலையில் ஐபிஎல்லில் பார்முடன் இருப்பது முக்கியமாகப் படுகிறது.

அதிக ஸ்டிரைக் ரேட்

அதிக ஸ்டிரைக் ரேட்

ரகானே கடந்த வருடம் போல சற்றே அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் உள்ளார். கடந்தாண்டு ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே ஆடியதால் ஜாதவின் ஆட்டத்தை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எனினும் அவரும் நூறுக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டிலேயே விளையாடி வருகிறார்.

அதிரடியாக ஆடவில்லை

அதிரடியாக ஆடவில்லை

விஜய் சங்கருக்கு இடம் கிட்டத்தட்ட உறுதியானாலும், அவராலும் பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை. ஒருவேளை முடிவுகள் தெரிந்தபிறகு அடுத்த வாரம் முதல் அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

காலிஸ் ஆதரவு

காலிஸ் ஆதரவு

இந் நிலையில், உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் அது ஒரு நகைச்சுவையாக பார்க்கப்படும். இந்தியா ஒரு மிகப்பெரிய தவறை இழைத்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, April 12, 2019, 20:48 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
Jacques Kallis backs Dinesh Karthik for Cricket World Cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X