For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடக்கி போடும் காயம்.. மொத்தமாக வாய்ப்பை இழக்கும் ஜடேஜா.. பின்னணியில் இருக்கும் அந்த வீரர்!

சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டரான ஜடேஜா மீண்டும் டெஸ்ட் அணிக்குள் திரும்புவது கடினமான காரியமாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு! சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு!

இந்த போட்டி முழுக்க ஸ்பின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். வெறும் இரண்டு நாளில் மொத்த ஆட்டமும் முடிவிற்கு வந்து இருக்கிறது.

அஸ்வின்

அஸ்வின்

இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜாதான் ஆட வேண்டும். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக அக்சர் பட்டேல் அணிக்குள் வந்தார்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

இந்திய அணியில் இணைந்து இருக்கும் அக்சர் பட்டேல் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இரண்டு பேருமே இடதுகை ஸ்பின் பவுலர்கள். இதில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆல் ரவுண்டரான ஜடேஜா மீண்டும் டெஸ்ட் அணிக்குள் திரும்புவது கடினமான காரியமாகி உள்ளது. இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை அக்சர் பட்டேல் மொத்தமாக மாற்ற வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஜடேஜா ஆடுவார் என்கிறார்கள்.

ஜடேஜா வெளிநாடு

ஜடேஜா வெளிநாடு

ஒருநாள், டி 20 போட்டிகளில் ஜடேஜா நிரந்தரமாக ஆடுவார். ஆனால் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அக்சர் பட்டேல்தான் இடம்பிடிப்பார் என்கிறார்கள். அக்சர் பட்டேல் இதனால் தனது பேட்டிங்கை மெருகேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Story first published: Sunday, February 28, 2021, 15:40 [IST]
Other articles published on Feb 28, 2021
English summary
Jadeja may not get chances in test matches as Axar Patel bowls very well.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X