அஸ்வின்
இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜாதான் ஆட வேண்டும். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக அக்சர் பட்டேல் அணிக்குள் வந்தார்.
அக்சர் பட்டேல்
இந்திய அணியில் இணைந்து இருக்கும் அக்சர் பட்டேல் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இரண்டு பேருமே இடதுகை ஸ்பின் பவுலர்கள். இதில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.
வாய்ப்பு
ஆல் ரவுண்டரான ஜடேஜா மீண்டும் டெஸ்ட் அணிக்குள் திரும்புவது கடினமான காரியமாகி உள்ளது. இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை அக்சர் பட்டேல் மொத்தமாக மாற்ற வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஜடேஜா ஆடுவார் என்கிறார்கள்.
ஜடேஜா வெளிநாடு
ஒருநாள், டி 20 போட்டிகளில் ஜடேஜா நிரந்தரமாக ஆடுவார். ஆனால் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அக்சர் பட்டேல்தான் இடம்பிடிப்பார் என்கிறார்கள். அக்சர் பட்டேல் இதனால் தனது பேட்டிங்கை மெருகேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.