For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 3 ஓவர்.. அதுதான் கதையை மாற்றியது.. ஆஸி.யின் அஸ்திவாரத்தை சல்லி சல்லியாக சரித்த ஜடேஜா!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர் ஜடேஜா மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்று இருக்கிறது. ஒரு பக்கம் ஸ்மித் நிலையாக ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாகி வருகிறார்கள்.

பும்ரா, சிராஜ் என்று இந்திய அணியின் பவுலர்களும் ஆதிக்கம் காட்ட தொடங்கி உள்ளனர். ஆஸ்திரேலியா அணி 300 ரன்களை நோக்கி தற்போது சென்று கொண்டு இருக்கிறது.

ஜடேஜா

ஜடேஜா

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர் ஜடேஜா மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முதல் நாள் ஆட்டத்தில் ஜடேஜாவிற்கு பெரிய அளவில் ஓவர் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று தொடக்கத்தில் இருந்து ஜடேஜா பவுலிங் செய்தார்.

பவுலிங்

பவுலிங்

தொடக்கத்தில் இருந்தே ஜடேஜா தனது பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். ஸ்லோ ஸ்பின், யார்க்கர் ஸ்பின் என்று வித்தியாசமான பவுலிங்கை ஜடேஜா செய்தார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அஸ்வினை எதிர்பார்த்து களமிறங்கிய நிலையில் இன்று ஜடேஜா எதிர்பார்க்காத வகையில் அழுத்தம் கொடுத்தார்.

அழுத்தம்

அழுத்தம்

அதிலும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் மற்றும் மேத்யூ வேடிற்கு இவர் செய்த பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அதிரடியாக ஆடி வந்த மார்னஸ் ஜடேஜா ஓவரில் 91 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் மேத்யூ வேட் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கேட்ச்

கேட்ச்

இதேபோல் பாட் கும்மின்ஸ் ஜடேஜா பவுலிங்கில் டக் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் இன்று ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார்கள். ஜடேஜாவிற்கு நேற்று குறைந்த அளவு ஓவர்களே கொடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிக ஓவர் கொடுக்கப்படுகிறது. ஜடேஜாவை இன்று ரஹானே மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.

Story first published: Friday, January 8, 2021, 10:01 [IST]
Other articles published on Jan 8, 2021
English summary
Ravindara Jadeja takes three wickets against Australia in the third test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X