For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேரத்தில் பவார் ஆதரவு.. சீனி ஆதரவு ஜக்மோகன் டால்மியா பிசிசிஐ தலைவரானார்!

By Veera Kumar

சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ஜக்மோகன் டால்மியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகிப்பவர் ஜக்மோகன் டால்மியா. சென்னையில் இன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், பிசிசிஐ தலைவராக ஒரு மனதாக டால்மியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர், 2001 முதல் 2004வரை பிசிசிஐ தலைவராக பதவிவகித்துள்ளார். 1997ல் இருந்து தொடர்ந்து மூன்றாண்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான, ஐசிசியிலும் டால்மியா தலைவராக பதவி வகித்துள்ளார்.

Jagmohan Dalmiya elected BCCI president

ஐபிஎல் பிரச்சினை தொடர்பாக சீனிவாசனை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கீழிறங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து 2013ல் பிசிசிஐயின், இடைக்கால தலைவராகவும் டால்மியா பதவி வகித்தார். பிசிசிஐயின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டால்மியா 2006ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். நிதி முறைகேடு புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மறு ஆண்டே, கோர்ட்டில் தன்னை நிரபராதி என்று டால்மியா நிரூபித்தார்.

74 வயதான டால்மியா, 1979ல் பிசிசிஐயில் இணைந்தார். 1983ல் பொருளாளராக பணியாற்றினார். 1987 மற்றும் 1996ம் ஆண்டுகளில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்கள் ஆசியாவில் நடைபெற டால்மியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

ஐபிஎல் புகார்களால் பிசிசிஐ தேர்தலில் சீனிவாசன் போட்டியிட கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், டால்மியாவின் தேர்வு நடந்துள்ளது என்பது நினைவு கூறத்தக்கது.

பிசிசிஐ நிர்வாகிகள் விவரம்: டால்மியா- தலைவர், அனுராக் தாக்கூர்- செயலாளர், அனிருத் சவுத்ரி- பொருளாளர். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சஞ்சய் பட்டேல், 1 வாக்கு வித்தியாசத்தி்ல் அனுராக் தாக்கூரிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 2, 2015, 12:56 [IST]
Other articles published on Mar 2, 2015
English summary
Jagmohan Dalmiya has returned as the president of Board of Control for Cricket in India (BCCI) as he was elected today for the top post at the Indian cricket board's Annual General Meeting (AGM) here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X