For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்.. பேட்டிங் பிட்சில் விக்கெட் எடுத்தது எப்படி? ரகசியத்தை உடைத்த ஜிம்மி

ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

40 வயதான ஆண்டர்சன் 46 ஓவர்களை வீசி இளம் வீரர்களுக்கு கடும் டப் கொடுத்தார். இதை தொடர்ந்து ஆண்டர்சன் மற்றொரு சாதனையும் படைத்திருக்கிறார்.

வரலாற்று வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..பேட்டிங் சாதகமான ஆடுகளத்தில் அபாரம்..பாகிஸ்தான் படுதோல்விவரலாற்று வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..பேட்டிங் சாதகமான ஆடுகளத்தில் அபாரம்..பாகிஸ்தான் படுதோல்வி

கடும் முயற்சி

கடும் முயற்சி

அதாவது அதிக சர்வதேச டெஸ்ட் வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை ஆண்டர்சன் படித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்டர்சன், என் வாழ்நாளில் நான் பெற்ற சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் விளையாடிய விதம் தான் எங்களை வெற்றி அடைய வைத்திருக்கிறது. எங்களுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அனைத்து வீரர்களும் இன்று கடினமாக உழைத்தனர். ஆடுகளத்தில் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவே இல்லை. பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய நாங்கள் கடுமையாக முயற்சித்தோம்.

காரணம்

காரணம்

பேட்ஸ்மேன்களின் கால்களுக்கு நேராக பந்துகளை தொடர்ந்து வீசிக்கொண்டு இருந்தோம். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் இழக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நிச்சயமாக இன்றைய ஆட்டம் கடுமையாக இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்குல்லம் , எப்போதும் விக்கெட்டுகளை எடுங்கள்! விக்கெட்டுகளை எடுங்கள்! என்று எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தனர். முதல் இன்னிங்ஸில் நாங்கள் ரன் குவித்த விதமும் பாகிஸ்தானை விட நாங்கள் பெற்ற முன்னிலையும் எங்களுக்கு வெற்றியை பெற்று தந்து விட்டது. ஆடுகளம் ஐந்தாவது நாளில் கூட பேட்டிங்கிற்கு சாதகமா தான் இருந்தது.

திறமைக்கு வெற்றி

திறமைக்கு வெற்றி

ஆடுகளத்தில் பந்து ரிவர்ஸ் ஆகவில்லை. எனினும் நாங்கள் காற்றிலே பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் முறையை கடைப்பிடித்தும். இது எங்களுடைய திறமைக்கு கிடைத்த வெற்றி. முதலில் ஸ்டோக்ஸ், ராபின்சன் ஆகியோர் ஷாட் பால்கலை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தனர். அவர்கள் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியவுடன் எங்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்தது.கேப்டனாக பிரமிக்க வைக்கிறார். நாங்கள் விளையாடும் போது எங்களுக்கு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். பேட்ஸ்மேன்களுக்கு பில்டிங்கை நிறுத்தும் விதம் என அனைத்திலும் அவர் வித்தியாசமாக யோசித்தார்.

4 முக்கிய விக்கெட்

4 முக்கிய விக்கெட்

இந்த வெற்றியை நான் சந்தோஷமாக கொண்டாடுகிறேன். ஆனால் நாளை நான் எப்படி இருக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஐந்து நாள் கடுமையாக களத்தில் உழைத்தோம். இப்போது அடுத்த டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் தான் இடைவெளி இருக்கிறது. இதனால் என்னுடைய உடல் எப்படி சரியாகும் என எனக்கு தெரியவில்லை என்று ஆண்டர்சன் கூறினார். இரண்டாவது இன்னிங்ஸில் 24 ஓவர்கள் வீசி ஆண்டர்சன் 36 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 5, 2022, 21:55 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
James anderson reveals the secret of picking wickets in flat track in rawalpindi புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்.. பேட்டிங் பிட்சில் விக்கெட் எடுத்தது எப்படி? ரகசியத்தை உடைத்த ஜிம்மி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X