For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் சுப்பராயன் கணக்கா விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்டர்சன்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது இன்னிங்சில் இந்திய அணி ஆடி வருகிறது.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை 178 ரன்களுக்கு இந்திய பௌலர்ள் ஆல்-அவுட் ஆக்கினர்.

தோனிதான் புறக்கணித்தது.. நம்பிக்கை இழந்த இளம் தமிழக வீரர்..தப்பான இடத்தில் மாட்டி தவிக்கும் சிஎஸ்கே தோனிதான் புறக்கணித்தது.. நம்பிக்கை இழந்த இளம் தமிழக வீரர்..தப்பான இடத்தில் மாட்டி தவிக்கும் சிஎஸ்கே

இதையடுத்து பேட்டிங்கிலும் சூப்பராக விளையாடி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் 140 ரன்களில் 6 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்துள்ளது. ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2வது இன்னிங்சில் இந்தியா

2வது இன்னிங்சில் இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தற்போது ஆடி வருகிறது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை நேற்றைய தினம் ஆடிய நிலையில், 178 ரன்களில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்திய அணி.

இந்தியா திணறல்

இந்தியா திணறல்

இந்நிலையில் இன்றைய தினம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 420 இலக்கை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 140 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய பந்த், புஜாரா, சுந்தர் ஆகியோரும் சொற்ப ரன்களில் மற்றும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

ஜேம்ஸ் ஆன்டர்சன் சிறப்பு

ஜேம்ஸ் ஆன்டர்சன் சிறப்பு

நேற்றைய தினம் ஒரு ரன்னில் அவுட்டான துணை கேப்டன் ரஹானே, இன்றைய தினம் டக் அவுட் ஆகியுள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியின் ஹீரோவாக எதிரணி பௌலர் ஜேம்ஸ் ஆன்டர்சன் காணப்படுகிறார். அடுத்தடுத்து சுப்மன் கில், ரஹானே மற்றும் பந்த் என 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

4 இன்னிங்சில் 10 விக்கெட்டுகள்

4 இன்னிங்சில் 10 விக்கெட்டுகள்

38 வயதான அவர், கடந்த 4 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய தினம் அவர் ஒரு ஓவரில் டாட் பால், விக்கெட், டாட் பால், டாட் பால், விக்கெட், டாட் பால் என பௌலிங் செய்து அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளார். வயதானாலும் தன்னுடைய திறமை குறையவில்லை என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.

Story first published: Tuesday, February 9, 2021, 12:56 [IST]
Other articles published on Feb 9, 2021
English summary
James Anderson is proving why he is one of the best ever
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X