For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜேம்ஸ் பால்க்னெர் ஹாட்ரிக் எடுத்து அசத்தல்... ஆனாலும் ஆஸி.க்கு தோல்வி தான்!

கொழும்பு: இலங்கை-ஆஸ்ரேலியா அணிகளிடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். எனினும், ஆஸ்திரேலிய அணி அப்போட்டியில் 82-ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் படுதோல்வியடைந்தது மட்டுமல்லாமல், டெஸ்ட்டில் நம்பர்-1-ல் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டது.

James Faulkner claims hat-trick vs SL

இதையடுத்து கடந்த 21-ந் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 3-விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரில் தனது முதல் வெற்றிக் கனியை ருசித்தது.

இனி வெற்றி முகம் தான் என நினைத்த ஆஸ்திரேலியா நேற்று 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 48.5 ஓவர்களில் இலங்கை 288 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இடது கை பந்து வேகப்பந்து வீச்சாளரான பால்க்னெர் 46-வது ஓவரின் கடைசி பந்தில் குஷால் பெரேராவை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

பின்னர் 48-வது ஓவரை வீச வந்த பால்க்னெர், அந்த ஓவரின் முதல் பந்தில் ஆங்கிலோ மேத்திவ்ஸை வீழ்த்தினார். அடுத்து 2-வது பந்தில் ஹாட்ரிக் விக்கட்டை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பந்து வீசிய அவர், திஷாரா பெரேராவை கிளின் போல்டாக்கி ஹாட்ரிக்கை வசப்படுத்தினார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 6-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் பால்க்னெர். இப்போட்டியில் 9 ஓவர்களை வீசிய அவர் 45-ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் 289-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமாக இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.2 ஓவர்களில் 206 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், 5- ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.

Story first published: Thursday, August 25, 2016, 18:15 [IST]
Other articles published on Aug 25, 2016
English summary
All-rounder James Faulkner became the sixth player to take a one-day hat-trick for Australia as Sri Lanka won the second match of the series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X