கபில்தேவ், முகமது ஷமி சாதனையை முறியடித்த பும்ரா.. இங்கிலாந்துக்கு எதிராக 5வது டெஸ்ட்டில் அபாரம்

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பும்ரா புதிய சாதனையை படைத்துள்ளார்.

முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம் விளாச, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

பிசிசிஐ போட்ட சூப்பர் திட்டம்.. டி20 உலகக் கோப்பை நமக்கு தான்.. ஆஸி செல்லும் இந்திய அணிபிசிசிஐ போட்ட சூப்பர் திட்டம்.. டி20 உலகக் கோப்பை நமக்கு தான்.. ஆஸி செல்லும் இந்திய அணி

பும்ரா அசத்தல்

பும்ரா அசத்தல்

கேப்டனாக முதல் போட்டியில் களமிறங்கிய பும்ரா அனல் பறக்க பந்து வீசினார். பும்ராவின் ஓவர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் பும்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார், இதே போன்று சாக் கிராலி 9 ரன்களிலும், ஆலிவ் போப் 10 ரன்களிலும் பும்ராவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பும்ரா சாதனை

பும்ரா சாதனை

இதன் மூலம் முதல் 30 டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். பும்ரா தற்போது 126 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்பு கபில்தேவ் 30 டெஸ்ட் போட்டியில் 124 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 110 விக்கெட்டுகளையும், ஸ்ரீநாத் 101 விக்கெட்டுகளையும்,இர்பான் பதான் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

தற்போது இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாரிஸ்டோ ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இன்னும் 3 நாள் எஞ்சிய நிலையில், இங்கிலாந்து அணியை 200 முதல் 250 ரன்களுக்குள் சுருட்டினால் , இந்திய அணி 150 ரன்களை முன்னிலை பெற்று 2வது இன்னங்சில் விளையாடும்.

இந்தியா 2வது இன்னிங்ஸ்

இந்தியா 2வது இன்னிங்ஸ்

இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில் பெரிய இலக்குகளை எளிதாக எட்ட கூடியது.மேலும் இந்தப் போட்டியை டிரா செய்தாலே தொடரை இந்திய அணி வென்றுவிடும் என்பதால், 2வது இன்னிங்சில் இந்தியா அணி பெரிய இலக்கை நிர்ணயித்து போட்டியை டிரா செய்ய விளையாட வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jasprit bumarh breaks kapil dev record in most wickets for first 30 test கபில்தேவ், முகமது ஷமி சாதனையை முறியடித்த பும்ரா.. இங்கிலாந்துக்கு எதிராக 5வது டெஸ்ட்டில் அபாரம்
Story first published: Sunday, July 3, 2022, 16:05 [IST]
Other articles published on Jul 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X