For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு சாமி இது?? தகர்ந்து போன பிரைன் லாராவின் 19 ஆண்டு பெருமை.. காரணம் ஜஸ்பிரித் பும்ரா!!

பெர்மிங்கம்; இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரைன் லாராவின் பிரமாண்ட சாதனையை பும்ரா தகர்த்தார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இது ஜார்வோ 2.0 - இந்தியா, இங்கிலாந்து டெஸ்டில் சம்பவம்.. பதறி போய் நடவடிக்கை எடுத்த போலீஸ்இது ஜார்வோ 2.0 - இந்தியா, இங்கிலாந்து டெஸ்டில் சம்பவம்.. பதறி போய் நடவடிக்கை எடுத்த போலீஸ்

இந்திய அணி இன்னிங்ஸ்

இந்திய அணி இன்னிங்ஸ்

இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் சதமடித்து அசத்திய போதும், அனைவரின் பார்வையும் பும்ராவின் மீது திரும்பியது. இதற்கு காரணம் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்-ஐ ஒரே ஓவரில் பும்ரா வச்சு செய்தது தான். இந்த ஓவரில் மட்டும் 35 ரன்கள் பறந்தன.

 பேட்டிங் சரவெடி

பேட்டிங் சரவெடி

ஆட்டத்தின் 84வது ஓவரில் முதல் பந்தை பும்ரா பவுண்டரிக்கு விளாசினார். 2வது பந்து வைடாக சென்று 5 ரன்கள் கிடைத்தது. இதன் பின் போடப்பட்ட பந்து நோபாலாக வீச, சாதூர்யமாக செயல்பட்ட பும்ரா சிக்ஸர் அடித்தார். அடுத்து போடப்பட்ட 3 பந்துகளில் 3 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடிக்க, 5வது பந்து சிக்ஸருக்கு பறந்தது. கடைசி பந்து மட்டும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் சிங்கிளாக சென்றது. அவர் அடித்தது மொத்தம் 35 ரன்கள் (4,6,4,4,4,6,1) ஆகும்.

சாதனை தகர்ப்பு

சாதனை தகர்ப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2003-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி சாதனை படைத்தார். இதன் பின்னர் வந்த பல வீரர்கள் லாராவின் சாதனையை சமன் செய்தாலும், முறியடிக்க முடியவில்லை. ஆனால் 19 ஆண்டுகளுக்கு பின் பும்ரா முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

 அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

ஒரு கேப்டனாக பேட்டிங்கில் மட்டும் கலக்காமல், பந்துவீச்சிலும் பும்ரா வியப்பை ஏற்படுத்தினார். அவரின் ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் (6), ஜாக் க்ராவ்லே (9) அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த ஒல்லி போப் 10 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் அந்த அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Saturday, July 2, 2022, 21:51 [IST]
Other articles published on Jul 2, 2022
English summary
Jasprit bumrah Beats Brain lara's World record ( இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்) இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பிரைன் லாராவின் பிரமாண்ட சாதனையை பும்ரா முறியடித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X