For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே இன்னிங்ஸில் 13 நோ-பால்.. பும்ரா இப்படி வீசியது ஏன்? மனநிலை மாற்றமா? - ஜாகீர் கான் விளக்கம்

லண்டன்: ஒரே இன்னிங்ஸில் 13 நோ-பால் வீசியிருக்கும் பும்ராவின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து ஜாகீர் கான் விளக்கியுள்ளார்.

Recommended Video

Ind vs Eng: ஒரே Innings-ல் 13 No-Balls வீசிய Bumrah.. Zaheer Khan சொன்ன காரணம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

தலிபான்கள் பிடியில் ஆப்கன்.. சிக்கிக் கொண்ட குடும்பம்.. வெளியேற்ற முடியாமல் தவிக்கும் ரஷீத் கான்தலிபான்கள் பிடியில் ஆப்கன்.. சிக்கிக் கொண்ட குடும்பம்.. வெளியேற்ற முடியாமல் தவிக்கும் ரஷீத் கான்

இதில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 391 ரன்கள் சேர்த்தது. இதனால், இந்தியாவை விட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

154 ரன்கள் முன்னிலை

154 ரன்கள் முன்னிலை

இந்த நிலையில், நேற்று (ஆக.15) நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் விளையாடிய வருகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அஜின்க்யா ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். தற்போது ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 154 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தொடரும் நோ-பால் சிக்கல்

தொடரும் நோ-பால் சிக்கல்

எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக பந்து வீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. மொத்தம் 26 ஓவர்கள் வீசி 79 ரன்களை கொடுத்தார். அதுமட்டுமின்றி, மூன்றாவது நாளில் 13 நோ-பால்களை வீசி சொதப்பி இருக்கிறார். ஒருநாள், டி20 போட்டிகளில் முக்கிய கட்டங்களில் நோ-பால் வீசி ஆட்டத்தை மாற்றிவிடும் பும்ரா, மீண்டும் அதே பழக்கத்தை கையிலெடுத்து இருக்கிறார். 2017ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான பும்ரா முக்கிய விக்கெட் ஒன்றை கைப்பற்ற, கடைசியில் அது நோபாலாக அறிவிக்கப்பட்டு, பாகிஸ்தான் 300 சிறப்பாக மேல் குவித்து வெற்றிப் பெற்றதை மறக்க முடியுமா என்ன? இந்நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து நோ-பால் வீசி விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

ஏன் நோ-பால் வீசப்படுகிறது?

ஏன் நோ-பால் வீசப்படுகிறது?

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான், "பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. எப்படியாவது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற பிரஷரில் பௌலிங் ரன்னப்பில் கூடுதல் வேகமும், கிரீஸில் கால்வைக்கும் போது சற்று அழுத்தமான புஷ்ஷையும் பும்ரா கொடுப்பதாக நினைக்கிறேன். இதன் காரணமாகத்தான் அவர் தொடர்ந்து நோ-பால் வீசுகிறார் என்று நினைக்கிறேன். இது முழுக்க எனது யூகம்தான். அனால், அவர் எதனால் தொடர்ந்து நோ-பால் வீசுகிறார் என்பதை தெளிவாகக் கூற முடியாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர்களது ரன்னப்தான், சரியான லைன், சரியான ரிதத்தை பெற்று கொடுக்கும். தொடர்ந்து விக்கெட் வீழ்த்தாத நிலையில், ரன்னப்பில் கூடுதல் அழுத்தத்தையும், வேகத்தையும் சேர்க்கும்போது நோ-பால்கள் அதிகமாக வீசும் நிலை ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

தப்பிக்குமா இந்தியா?

தப்பிக்குமா இந்தியா?

எது எப்படியோ.. இன்று 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்தியா கைவசம் இன்னும் நான்கு விக்கெட்டுகளே மீதம் உள்ளன. 154 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. எப்படியாவது தட்டித் தட்டி மேற்கொண்டு 100 ரன்கள் அடித்துவிட்டால், இந்தியா ஓரளவுக்கு இங்கிலாந்திடம் போராடிப் பார்க்கலாம். அட்லீஸ்ட் மேற்கொண்டு 50 ரன்களாவது அடித்தே ஆக வேண்டும். இல்லையெனில், லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஆட்டம் இந்தியா கையைவிட்டு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. தற்போது களத்தில் நிற்கும் ஒரே பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மட்டுமே. அவர் அடித்தால் மட்டுமே இந்தியாவால் ஓரளவு டீசண்ட்டான இலக்கை நிர்ணயிக்க முடியும்.

Story first published: Monday, August 16, 2021, 16:28 [IST]
Other articles published on Aug 16, 2021
English summary
Jasprit Bumrah bowl 13 No-Balls In Single Innings - பும்ரா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X