For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

IND vs ENG: India-வின் T20I & ODI Squad அறிவிப்பு! | Aanee's Appeal | *Cricket

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரோகித் சர்மாவுக்கு வியாழக்கிழமை எடுத்த பரிசோதனையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக முடிவு வந்தது.

இதனையடுத்து, அவர் விலகுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ, பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுத்துள்ளது.

இதன் மூலம் இந்திய அணியின் 36வது டெஸ்ட் கேப்டனாக, பும்ரா செயல்பட உள்ளார். 1986ஆம் ஆண்டு கபில் தேவ்க்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Jasprit bumrah is appointed as test captain – Rishabh pant made his deputy

இதனையடுத்து பும்ராவுக்கு பலத்தரப்பு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தம் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய கவுரவம் இது என்று பும்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா தான்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவரே ரோகித் சர்மா தான். ரோகித்தும், கேஎல் ராகுலும் தான் கடந்த ஆண்டு இந்தியாவின் மானத்தை காபபாற்றினர். தற்போது இருவரும் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இந்திய அணிக்கு இது 6வது புதிய கேப்டனாகும்.

2வது முறை ரோகித்துக்கு கொரோனா உறுதி.. புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.. 35 ஆண்டுக்கு பிறகு சாதனை2வது முறை ரோகித்துக்கு கொரோனா உறுதி.. புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.. 35 ஆண்டுக்கு பிறகு சாதனை

Story first published: Thursday, June 30, 2022, 23:56 [IST]
Other articles published on Jun 30, 2022
English summary
Jasprit bumrah is appointed as test captain – Rishabh pant made his deputy Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X