For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்துவீச்சில் பும்ரா செய்த டிரிக்... இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? பும்ரா விளக்கம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் படுதோல்வியை தழுவியது.

டெஸ்ட் போட்டியில் அதுவும் கடைசி இன்னிங்சில் இவ்வளவு ரன்களை இந்தியா அடிக்கவிட்டது குறித்து பல விமர்சனங்கள், கேலி கிண்டல்கள் எழுந்தன.

இதற்கு எல்லாம் வட்டியும், முதலுமாக சேர்த்து, டெஸ்ட் போட்டிக்கு கேப்டன பொறுப்பை ஏற்று இருந்த பும்ரா தற்போது கொடுத்துள்ளார்.

இந்தியாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது.. ரொம்ப கடினமான நாள்.. புலம்பிய பட்லர்.. ரோகித் பாராட்டுஇந்தியாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது.. ரொம்ப கடினமான நாள்.. புலம்பிய பட்லர்.. ரோகித் பாராட்டு

கெட்டு போன சந்திப்பு

கெட்டு போன சந்திப்பு

பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்தின் மிரட்டல் பேட்டிங் வரிசை பொட்டி பாம்பாக அடங்கியது. அதுவும் ஜோ ரூட், பட்லர், பாரிஸ்டோ, ஸ்டோக்ஸ் எல்லாம் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் ஒன்றாக பங்கேற்றனர். ஆனால் பும்ரா தனது பந்தை பேச வைத்தார். அதற்கு எந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களாலும் பதில் கூற முடியவில்லை.

பும்ரா செய்த டிரிக்

பும்ரா செய்த டிரிக்

இந்த நிலையில் இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது எப்படி என்பது குறித்து பும்ரா பேசினார். அப்போது பந்து ஸ்விங் மற்றும் சீம் மூமேண்ட் இருந்தால் அதனை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் தான் ஈடுபட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இப்படி ஒரு சூழ்நிலையும், ஆடுகளமும் கிடைப்பது அரிது. நான் முதல் பந்தை வீசும் போதே தெரிந்தது. பந்து ஸ்விங் ஆகும் என்று..பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் நமது லெங்த்தை சரி செய்ய வேண்டும்.

ஷமியிடம் ஆலோசனை

ஷமியிடம் ஆலோசனை

பந்து எதாவது செய்கிறது என்றால் நாம் வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டியது இல்லை. ஆனால் இதுவே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தால், அது நம் பந்துவீசும் துல்லிய அளவை சோதிக்கும். ஷமி முதல் ஓவரை வீசிய போது, நாங்கள் இருவரும் பந்தை கொஞ்சம் ஃபுல் லெங்தில் வீச வேண்டும் என்று பேசி கொண்டோம். இதன் மூலம் முகமது ஷமியும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Recommended Video

Rohit Sharma குறித்து ஏன் வாய் திறக்க மாட்றீங்க? -Gavaskar கேள்வி *Cricket
சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

பந்து ஸ்விங் ஆகும் போது, அது விக்கெட் கீப்பருக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். அவர் பயிற்சியில் கடுமையாக உழைக்கிறார் என்று பும்ரா பாராட்டினார். இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா படைத்தார்.

Story first published: Wednesday, July 13, 2022, 11:41 [IST]
Other articles published on Jul 13, 2022
English summary
Jasprit Bumrah reveals the tatics of How He got England wickets பந்துவீச்சில் பும்ரா செய்த டிரிக்... இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? பும்ரா விளக்கம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X