For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாண்டியா குறித்து நச்சுன்னு நறுக்குன்னு ஒரே வார்த்தை... பும்ரா சொல்லியிருக்கறத பாருங்க!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரை கைப்பற்றியுள்ளது. இது அந்த அணியின் 5வது கோப்பை.

அந்த அணியின் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக இந்த வெற்றி சாத்தியமானது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து ஒரு வார்த்தையில் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அளித்த விளக்கங்களை மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளது.

மும்பை அணி வெற்றி

மும்பை அணி வெற்றி

ஐபிஎல் 2020 தொடரை மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றியுள்ளது. தன்னை எதிர்த்து மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டு, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை அணி. அந்த அணியின் வீரர்கள் குறிப்பாக, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா உள்ளிட்டவர்களின் சிறப்பான ஆட்டம் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது.

டிவிட்டரில் தொடர் பதிவுகள்

டிவிட்டரில் தொடர் பதிவுகள்

ஐபிஎல் தொடரின்போது அணியின் செயல்பாடுகள், வீரர்கள் குறித்து தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கங்களில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வந்தது. தற்போது ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையிலும் தொடர் பதிவுகளை இட்டு வருகிறது.

கவர்ச்சியானவர் -பும்ரா உற்சாகம்

கவர்ச்சியானவர் -பும்ரா உற்சாகம்

அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்த தொடரில் பௌலிங் செய்யவில்லை என்றாலும், பேட்டிங்கில் அணிக்கு கைகொடுத்தார். இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தார். இந்நிலையில், ஒரே வார்த்தையில் ஹர்திக் பாண்டியா குறித்து கூறுமாறு மும்பை இந்தியன்ஸ் கேட்டதற்கு ஜஸ்பிரீத் பும்ரா, கவர்ச்சியானவர் என்று கூறினார்.

கிடார் வாசித்த ஹர்திக்

மேலும் அணியின் கோச் மகேளா ஜெயவர்த்தனே 'கேரக்டர்' என்றும் ஷாகிர் கான் 'எனர்ஜி' என்றும், பௌலிங் கோச் ஷேன் பாண்ட் 'ஜாம்பவான்' என்றும் ஆதித்யா தாரே 'ராக்ஸ்டார்' என்றும் ஹர்திக் பாண்டியா குறித்து விளக்கம் அளித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோவின் இறுதியில் பாண்டியா கிடார் வாசித்தும் பாடல் பாடியும் அசத்தியுள்ளார்.

Story first published: Thursday, November 19, 2020, 10:45 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
Hardik been called "glamorous", with the term used by Bumrah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X