For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னோட பெஸ்ட்ட வெளிய கொண்டுவரணும்... அதுக்கு பெஸ்ட் அணிதான் என்னோட சாய்ஸ்... பும்ரா தெளிவு!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர்களில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.

கடந்த 2018 -19ன்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அதில் பும்ராவின் பங்கு அதிகமாக இருந்தது. அவர் அந்த தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தன்னுடைய சிறப்பான திறமையை வெளிக் கொண்டுவர சிறப்பான அணியுடன் மோதுவது நல்ல பலனளிக்கும் என்று பும்ரா கூறியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்

வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் அணி வீரர்கள் அதற்கென தயாராகி வருகின்றனர்.

முக்கிய பங்குவகித்த பும்ரா

முக்கிய பங்குவகித்த பும்ரா

கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அந்த அணியுடனான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்த தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அவர் நாதன் லியோன் இருவரும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தனர்.

திறமைகள் வெளிப்படும்

திறமைகள் வெளிப்படும்

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜஸ்பிரீத் பும்ரா, சிறப்பான அணியுடன் விளையாடும்போதுதான் நம்மிடம் இருக்கும் சிறப்பான திறமைகள் வெளிப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நெருக்கடி சூழல்களை சந்திக்கும் வலிமையும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக அமையும்

சிறப்பாக அமையும்

இந்தியாவில் தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, தற்போது வெளிநாட்டில் முதல் முறையாக இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் மிகுந்த சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கூறியுள்ள பும்ரா, பகலிரவு போட்டியும் சிறப்பானதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

பாதிப்பை ஏற்படுத்தும்

பாதிப்பை ஏற்படுத்தும்

எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பும்ரா கூறினார். வெள்ளை பந்து போட்டிகளில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகாது என்று கூறிய பும்ரா அதனால் எச்சில் பயன்பாடு இல்லையென்றாலும் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Story first published: Monday, November 23, 2020, 18:20 [IST]
Other articles published on Nov 23, 2020
English summary
The ban on the use of saliva to shine the ball will have a bigger role to play in the five-day format -Bumrah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X