For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேண்டவே வேண்டாம்… ஆள விடுங்க…!! கிரிக்கெட் வாரிய அழைப்பை கண்டு கும்பிடு போட்ட முன்னாள் கேப்டன்

கொழும்பு: உலக கோப்பையில் பணிபுரிய வேண்டும் என்ற இலங்கை கிரிக்கெட் வாரிய கோரிக்கையை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே நிராகரித்தார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் ஜெயவர்த்தனே. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது தலைமையில் 2 முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகி இருக்கிறது.

Jayawardene declines sri Lanka cricket board offer

குமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை தயாரித்திருந்தது. கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், அதில் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் திட்டங்களை அளித்திருந்தனர்.

தோத்துட்டீங்க... பரவாயில்ல..!! பயம் மட்டும் இருக்கக் கூடாது.. இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ் தோத்துட்டீங்க... பரவாயில்ல..!! பயம் மட்டும் இருக்கக் கூடாது.. இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை. அதை பற்றியும் கண்டு கொள்ளவில்லை. அதன் காரணமாக எழுந்த அதிருப்தியால், ஜெயவர்த்தனே இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.

தற்போது உலக கோப்பை தொடர் நடப்பதால், இலங்கை அணிக்கு உதவமாறு அவரிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரி இருந்தது. ஆனால்... அந்த கோரிக்கையை ஜெய வர்த்தனே நிராகரித்து விட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உண்மை தான்.

ஆனால், நான் ஏற்கனவே பல பணிகளை முன்னரே தேர்வு செய்து வைத்திருக்கிறேன். ஒட்டுமொத்த முழு கட்டமைப்பு பற்றி என்னால் எதையும் சொல்ல முடியவில்லை என்றால், யுக்திகள் போன்ற விஷயத்தில் நான் தலையிட அங்கு ஏதும் இல்லை. அணியின் தேர்வு உள்பட எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதனால் அங்கு வந்து சொல்ல இப்போது ஒன்றுமில்லை என்றார்.

Story first published: Monday, May 27, 2019, 11:30 [IST]
Other articles published on May 27, 2019
English summary
Former player Jayawardene declines sri Lanka cricket board offer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X