For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??

சிட்னி: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியை எப்படி கட்டுப்படுத்தி அவுட் எடுப்பது என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் ஐடியா கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி முடிவடைகிறது.

இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்தியாவுக்கு வந்துவிட்டனர். இந்திய அணி வீரர்களும் நாக்பூரில் ஒன்றுக்கூடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

கடைசியாக 3 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை ஒரு முறை கூட ஆஸ்திரேலிய அணியால் வீழ்த்த முடியவில்லை. இந்திய அணியோ கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை இழக்காமல் அசுர பலத்துடன் களமிறங்கவுள்ளது. இதனால் இந்த முறை வரலாறு மாற்றி அமைக்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

விராட் கோலியின் பசி

விராட் கோலியின் பசி

ஆஸ்திரேலியாவுக்கு கடந்த முறை அச்சுறுத்தலாக இருந்தது ரிஷப் பண்ட் மட்டும் தான். இந்த முறை அவர் இல்லையென்றாலும் விராட் கோலி புதிய எமனாக வந்து நின்றுள்ளார். ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுத்த அவர், டி20யை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் தாண்டவம் ஆடி வருகிறார். அவரின் அடுத்த டார்கெட் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் தான்.

எப்படி சமாளிக்கலாம்

எப்படி சமாளிக்கலாம்

இந்நிலையில் கோலியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் யோசனை கூறியுள்ளார். அதில், விராட் கோலியை விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பந்துவீசவே வீசாதீர்கள். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வீசுவதை போன்றே அவரையும் நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நெருக்கடி கொடுக்க முடியும்.

சிரம பட வேண்டும்

சிரம பட வேண்டும்

விராட் கோலியை முதல் பந்தில் இருந்தே சிரமப்பட வைக்க வேண்டும். ஒரு சிங்கிள் ரன் அடித்தாலும் கூட அவர் மிகவும் ரிஸ்க் எடுத்து தான் ஆட வேண்டும் என்ற சூழலை உருவாக்குங்கள். விக்கெட் எடுப்பதை விட, நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது வித்தியாசமாக இருக்கும். இதனை பவுலர்கள் நன்கு அறிவார்கள். விராட் கோலியை ரன் அடிக்க விடாமல் அதிக ரிஸ்க் எடுக்க வைத்தாலே அவுட்டாக்கிவிடலாம்.

மன பலம்

மன பலம்

கோலி ஆக்ரோஷமான வீரர். நீண்ட நேரம் ரன் அடிக்கவில்லை என்றால் நிச்சயம் கோபத்தில் ரிஸ்க் எடுப்பார். அப்போது அவுட்டாவார். தயவு செய்து தவறான பந்தை மட்டும் வீசி அவரை ரன் அடிக்க விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் மன பலத்தில் யார் வெல்வார் என்பது தான் இங்கு போட்டியே என ஜெஃப் தாம்சன் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 3, 2023, 12:21 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Former Australians Pacer Jeff Thomson gives idea to australian bowlers for How to get virat kohli wicket, here is the weakness point of kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X