140 ஆண்டுகால பாரம்பரியம் மாறுகிறது..! ஆஷஸ் தொடரில் பிள்ளையார் சுழி போட்ட ஐசிசி...!

Ashes Series 2019 | ஆஷஸ் தொடரில் புதுமையை கொண்டு வந்த ஐசிசி...!- வீடியோ

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள், தங்களின் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாடுகின்றனர்.

ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் ஐசிசி புதிய விதிமுறைகளை அவ்வப் பொழுது அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வராமல் பாரம்பரியத்தை காத்து வந்தனர்.

ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியில் அவர்களின் பெயரோ அல்லது எண்ணோ இடம் பெறாது.

ஆஷஸ் தொடரில் மாற்றம்

ஆஷஸ் தொடரில் மாற்றம்

முழுவதும் வெண்மை நிறத்திலான ஜெர்சியை மட்டும் தான் அணிந்து விளையாடுவார்கள். தற்போது, ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள், தங்களின் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாடுகின்றனர்.

140 ஆண்டு வரலாறு

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளின் 140 ஆண்டுகால வரலாறு மாற்றப்பட உள்ளது. முதன்முறையாக இந்த தொடரில் வீரர்களின் ஜெர்சியின் பின்புறம், அவர்களின் பெயர் மற்றும் ஜெர்சி எண் குறிப்பிடப்பட உள்ளது.

உறுதியானது தகவல்

உறுதியானது தகவல்

அதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் ஆரம்பத்தில் பரவிய நிலையில், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மாற்றங்கள் இல்லை

மாற்றங்கள் இல்லை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகின்றன. டெஸ்ட் தொடங்கியது முதல் இன்று வரை வீரர்களுக்கான ஜெர்சிகளில் எந்தவிதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. போட்டி விதிகள் மாறியபோதிலும், வெள்ளை உடைகள் மட்டுமே பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன.

ரசிகர்கள் ஏற்பார்களா?

ரசிகர்கள் ஏற்பார்களா?

ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இருப்பதுபோல் அல்லாமல், ஜெர்சியின் பின்புறம் பெயர்கள் அச்சிடப்படாமல், வெள்ளை உடையுடனே டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு வந்தது. தற்போது, இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதற்கு ரசிகர்கள் எவ்வாறு இருக்கும் என்பது போக, போகவே தெரியும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Jerseys to have players names and numbers in ashes test series for first time.
Story first published: Tuesday, July 23, 2019, 22:36 [IST]
Other articles published on Jul 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more