For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்முறை பார்த்தப்போ பௌலர்ன்னே நம்பலை... ஸ்கூல் பையன்னு நெனைச்சிட்டேன்... கவாஸ்கர் பளீர்

மும்பை : பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பௌலராக இணைந்துள்ளார் ஆஸ்திரேலிய பௌலர் ஜய ரிச்சர்ட்சன்.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி அவர் ராஜஸ்தான் அணியின் முக்கிய ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.,

இந்நிலையில் அவரை முதன்முதலில் தான் பார்த்தபோது தனக்கு எப்படி பீல் ஆனது என்பது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு

ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு

ஐபிஎல் 2021 தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்களை இலக்காக கொடுத்தது.

இலக்கை அடைய திணறல்

இலக்கை அடைய திணறல்

தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அதிரடியாக ஆடியது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதத்தை கடந்து ஆடினார். அணியின் ஜோஸ் பட்லர் 25 ரன்களும் சிவம் தூபே 23 ரன்களும் எடுத்தனர். ஆயினும் 222 ரன்கள் இலக்கை அடைய அந்த அணி மிகுந்த திணறலுடன் விளையாடியது.

ஆஸ்திரேலிய வீரர் ஜய ரிச்சர்ட்சன்

ஆஸ்திரேலிய வீரர் ஜய ரிச்சர்ட்சன்

இந்நிலையில் அணியின் இந்த தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக இணைந்துள்ளார் ஆஸ்திரேலிய பௌலர் ஜய ரிச்சர்ட்சன். அவரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அவருடன் இணைந்து நிக்கோலஸ் பூரன், ரிலே மெரிடித் மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அணியில் உள்ளனர்.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இந்நிலையில் ஜய ரிச்சட்சன்னை முதல்முறையாக தான் விமானத்தில் பார்த்ததாகவும் ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்ததாகவும் அவரை பௌலர் என்று நம்புவதற்கு தனக்கு சிரமமாக இருந்ததாகவும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இளம்வீரர் ரிச்சர்ட்சன்

இளம்வீரர் ரிச்சர்ட்சன்

அவரை முதல்முறை பார்த்தபோது ஸ்கூல் படிக்கும் பையன் என்று தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவர் இளம்வீரராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சைமன் டோல் தான் அவர் புதிய பௌலர் என்பதை தனக்கு உணர்த்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Monday, April 12, 2021, 23:36 [IST]
Other articles published on Apr 12, 2021
English summary
Gavaskar couldn't believe that Richardson is the new pacer for IPL 2021 when he saw him first
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X