For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயப்படாதீங்க... எதுக்கு பயப்படணும்... திறமையை நம்புங்க... அணி வீரர்களுக்கு ஜோ ரூட் ஆலோசனை

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை துவங்கி நடைபெறவுள்ளது.

கடந்த இரு போட்டிகளில் இந்தியாவிடம் மோசமான தோல்வியை அடைந்துள்ள இங்கிலாந்து அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளது.

கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்! கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்!

இந்நிலையில் இந்த போட்டியில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து தன்னுடைய அணி வீரர்களுக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அறிவுறுத்தியுள்ளார்.

4வது டெஸ்ட் நாளை துவக்கம்

4வது டெஸ்ட் நாளை துவக்கம்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. கடந்த இரு போட்டிகளில் இந்தியாவிடம் 317 மற்றும் 10 விக்கெட்டுகள் வித்தியாசங்களில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

வெற்றிக்கான அவசியம்

வெற்றிக்கான அவசியம்

இதையடுத்து பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும் நாளை போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் இந்த தொடரை இங்கிலாந்து அணி டிரா செய்ய முடியும். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதில் இருந்து இந்தியாவை நீக்க முடியும்.

ஜோ ரூட் ஆலோசனை

ஜோ ரூட் ஆலோசனை

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு தனது அணியின் வீரர்களுக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். போட்டி குறித்த அச்சத்தை விலக்கிவிட்டு தைரியமாக எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திரமாக விளையாட வேண்டும்

சுதந்திரமாக விளையாட வேண்டும்

அணி வீரர்களிடம் அதிகமான திறமைகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், 4வது டெஸ்ட் போட்டியில் தங்களது திறமையை மட்டுமே நம்பி சுதந்திரமாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார். பிட்ச் குறித்த அச்சத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தவறான அணி தேர்வு

தவறான அணி தேர்வு

நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த போட்டியை போலவே நாளைய போட்டியிலும் பிட்ச் இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியின்போது பிட்ச் குறித்து தவறான புரிதலை கொண்டு அணியை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். நாளை போட்டியில் ஆப்-ஸ்பின்னர் டாம் பெஸ் இணையவுள்ளார்.

Story first published: Wednesday, March 3, 2021, 10:17 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
We read the pitch wrong in terms of the way we selected the team -Joe Root
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X