For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த ஜோப்ரா ஆர்ச்சர்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஐந்து நாட்கள் தனிமையில் இருந்தார்.

அப்போது அவருக்கு சமூக வலைதளங்களில் இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் பதிவுகளை அனுப்பி இருக்கின்றனர்.

இதுவரை இது போன்ற பதிவுகளை கண்டு பொறுத்து வந்த ஆர்ச்சர், தற்போது அது குறித்து பொங்கி எழுந்து புகார் அளித்துள்ளார்.

ரொம்ப தப்பா போய்கிட்டு இருக்கு.. அந்த தம்பியை டீமை விட்டு தூக்குங்க! ஜாம்பவான் வீரர் கடும் விமர்சனம்ரொம்ப தப்பா போய்கிட்டு இருக்கு.. அந்த தம்பியை டீமை விட்டு தூக்குங்க! ஜாம்பவான் வீரர் கடும் விமர்சனம்

வெ.இண்டீஸ் வீரர்

வெ.இண்டீஸ் வீரர்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மிக குறுகிய நாட்களிலேயே மாறினார் ஜோப்ரா ஆர்ச்சர். பார்படோஸ் என்ற நாட்டை சேர்ந்த அவர் அங்கேயே இருந்து இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் தான் ஆடி இருக்க வேண்டும்.

இனவெறி

இனவெறி

ஆனாலும், அவர் இங்கிலாந்து அணியில் ஆட ஆசைப்பட்டு இங்கிலாந்து வந்தார். பல ஆண்டுகள் உள்ளூர் அணியில் ஆடி பின் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு பெற்றார். கருப்பினத்தை சேர்ந்த அவரை சமூக வலைதளங்களில் தொடர்ந்து இனவெறியை தூண்டும் வகையில் சிலர் சீண்டி வருகின்றனர்.

பரபரப்பு

பரபரப்பு

கடந்த காலங்களில் ஆர்ச்சர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை நியூசிலாந்து தொடரின் இடையே அளித்த பேட்டியில் ரசிகர் கூட்டத்தில் சிலர் தன்னிடம் இனவெறியுடன் பேசியதாக கூறி இருந்தார். அப்போது அது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதங்கம்

ஆதங்கம்

நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் குறிப்பிட்ட ரசிகர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னும் சமூக வலைதளங்களில் இனவெறியர்களை எதிர்கொண்டு வந்தார் ஆர்ச்சர். அவ்வப்போது சில மோசமான பதிவுகளை பகிர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்.

கால்பந்து வீரருக்கு மிரட்டல்

கால்பந்து வீரருக்கு மிரட்டல்

சமீபத்தில் கிறிஸ்டல் பேலஸ் என்ற கால்பந்து அணியை சேர்ந்த வீரர் வில்பிரையிட் ஸாஹாவிற்கு 12 வயது சிறுவன் இனவெறியுடன் பதிவிட்டு மிரட்டல் விடுத்து சிக்கினான். அதைத் தொடர்ந்து ஆர்ச்சர் தானும் நடவடிக்கையில் இறங்க முடிவு செய்தார்.

புகார்

புகார்

இந்த நிலையில், ஐந்து நாள் தனிமையில் இருந்த போது அவதூறாக, இனவெறியாக வந்த பதிவுகளை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிர்வாகத்தின் பார்வைக்கு வைத்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.

எல்லை மீறினால்..

எல்லை மீறினால்..

"வில்பிரையிட் ஸாஹா 12 வயது சிறுவனால் இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் நான் ஒரு கோடு போட்டுக் கொண்டுள்ளேன். எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். என் புகார்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பி உள்ளேன். இது சரியான நடைமுறையில் செல்லும்" என தன் புகார் பற்றி தெரிவித்தார் ஆர்ச்சர்.

Story first published: Wednesday, July 22, 2020, 15:11 [IST]
Other articles published on Jul 22, 2020
English summary
Jofra Archer complaints over racist abuse during his 5 day quarantine
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X