'ஐபிஎல் விளையாடணும்'.. நிலைமை தெரியாமல் 'உளறிய' ஆர்ச்சர்.. கடுப்பில் இங்கிலாந்து வாரியம்

சென்னை: மீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று அறிவித்திருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆனால், அதில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. தினம் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் ஐபிஎல் 2021. ஆனால், அங்கும் பயோ-பபுளை மீறி நுழைந்த கொரோனா, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தியை தாக்க, அதன் பிறகு பல வீரர்களுக்கும் தொற்று ஏற்பட, தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்தி வைத்தது பிசிசிஐ.

 கடினமான முடிவு

கடினமான முடிவு

ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கையில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில், சசெக்ஸ் கிரிக்கெட் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தால் எப்படியும் சீக்கிரம் வீடு வந்திருக்கலாம். மீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று நம்புகிறேன். காயம் ஏற்பட்டவுடன் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்பது நான் எடுத்த கடினமான முடிவு. நான் நிச்சயம் இந்தியா சென்றிருக்க முடியும். அப்படி சென்றிருந்தால், என்னால் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்க முடியும் என்று தெரியவில்லை" என்றார்.

 விளையாடுவது சிரமம்

விளையாடுவது சிரமம்

ஆனால், இவரது இந்த ஸ்டேட்மென்ட் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. ஆம்.. ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ளார். கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 எதிர்நோக்கி உள்ளோம்

எதிர்நோக்கி உள்ளோம்

இதுகுறித்து அவர், "அடுத்தடுத்த போட்டி அட்டவணைப்படி எங்களுக்கு நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் இங்கிலாந்து வீரர்களை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது. அதேநேரம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

 சிக்கல் வருமா?

சிக்கல் வருமா?

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கர்ரன், மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் (டெல்லி கேபிடல்ஸ்), இயான் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்) ஆகிய 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகலாம். இந்த சூழலில், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல்-ல் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jofra Archer 'hopeful' of playing IPL 2021 - ஐபிஎல் 2021
Story first published: Friday, May 14, 2021, 20:16 [IST]
Other articles published on May 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X