For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனி 2 மாதங்களில் ஓய்வு..? 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...! வைரலாகும் டுவிட்டர்

மும்பை: தல தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து 2014ம் ஆண்டே ஜோப்ரா ஆர்ச்சர் கணித்து சொன்னதாக வெளியாகி உள்ள டுவிட்டர் பதிவை கண்டு ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.

உலக கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்ய உ ள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

முன்னாள் கேப்டன் தல தோனி இந்தத் தொடரிலிருந்து விலகி தனது பாரா மிலிட்டரி பிரிவுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐக்கும் அவர் தகவல் தெரிவித்துவிட்டார். ஆனாலும், அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை.

தோனி விளையாடவில்லை

தோனி விளையாடவில்லை

2 மாதங்கள் பாராமிலிட்டரி பிரிவுடன் பணியாற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் கணிப்பு என்று சொல்லப்படும் ஒரு கணிப்பு இணையத்தில் ரவுண்டு கட்டி வருகிறது.

டுவிட்டர் பதிவு

டுவிட்டர் பதிவு

அதாவது 2014ம் ஆண்டு அவர் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் இன்னும் மாதங்கள் ஓய்வு என்று ஒரு பதிலை சொல்லி பதிவிட்டு உள்ளார். அவர் யாரை கூறுகிறார்? என்ன சொல்கிறார் என்பது பற்றி விவரமாக இல்லை.

தோனி குறித்து பதிவு

தோனி குறித்து பதிவு

ஆனால், அவர் நிச்சயமாக சொன்னது தோனியை தான்... அவர் தான் தற்போது 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாகவும், பாராமிலிட்டரியுடன் பணியாற்ற போவதாகவும் கூறியிருக்கிறார். எனவே, இந்த பதிவு தோனியை பற்றியது தான் என்று செய்திகளை ரசிகர்கள் உலவ விட்டுள்ளனர்.

யாரை சொல்கிறார்?

யாரை சொல்கிறார்?

2019ம் ஆண்டு நடப்பதை, 5 ஆண்டுகள் முன்பே கணித்து சொல்லியிருக்கும் ஆர்ச்சர் என்று தல தோனி ரசிகர்கள் புளங்காகிதம் அடைந்துள்ளனர். ஆனால், உண்மையில் யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை என்றும் பொத்தாம் பொதுவாக கூறுகிறார் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

பதிவு பொய்யானதா?

பதிவு பொய்யானதா?

2014ம் ஆண்டு ஜோப்ரா என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பலரும் தெரியாது. 1995ம் ஆண்டு முட்டாள்கள் தினத்தில் பிறந்த (ஏப்.1) அவருக்கு இப்போது வயது 24. 5 ஆண்டுகள் முன்பே என்றால் தமது 19 வயதிலா அவர் டுவிட்டரில் பதிவை வெளியிட்டு இருப்பார்? எனவே, இது போலி என்றும், ரசிகர்களின் குறும்புத்தனம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, July 21, 2019, 16:09 [IST]
Other articles published on Jul 21, 2019
English summary
Jofra archer said that dhoni will retire after 2 months, a twitter goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X