For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி கேப்டனா இருக்கக் கூடாது.. டீமுக்குள் நடந்த மோதல்.. திட்டம் போட்டு தூக்கிய கோச்!

மும்பை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கங்குலி 2008இல் இருந்தே ஆடி வந்தார். முதல் ஐபிஎல் தொடரில் அவர் கேப்டனாக இருந்தார்.

Recommended Video

Nasser Hussain hated Ganguly for making him wait for toss

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னணி குறித்து பேசி உள்ளார் அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய ஆகாஷ் சோப்ரா.

அப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் புக்கானன் குறித்து அவர் பல்வேறு தகவல்களை கூறி உள்ளார்.

விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கிய போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்ற அணியாக இருந்தது. கங்குலி கேப்டனாக இருந்தது ஒருபுறம், ஷாரூக் கான் அணியின் உரிமையாளராக இருந்தது மறுபுறம் என அட்டகாசமான அணியாக காட்சி அளித்தது.

புரிதல் இல்லை

புரிதல் இல்லை

முதல் இரு சீசன்களுக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கானன் இருந்தார். முதல் சீசனின் துவக்கத்தில் நல்ல விதமாக இருந்த ஜான் புக்கானன் - கங்குலி புரிதல், முடிவில் மோசமானது.

முதல் சீசன்

முதல் சீசன்

முதல் சீசனில் பயிற்சியாளர் புக்கானன் - கேப்டன் கங்குலி இடையே முட்டல் மோதல்கள் வெடித்தன. இருவரின் அணி மேலாண்மை வேறு வேறாக இருந்தது. நாட்கள் ஆக, ஆக கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. முட்டல், மோதல்கள் வெடித்தன.

கருத்து வேறுபாடுகள்

கருத்து வேறுபாடுகள்

2009 ஐபிஎல்லுக்கு முன் கங்குலி கேப்டனான தன்னிடம் யாரும் அணியில் இருந்து பேசவில்லை என புகார் கூறினார். ஆனால், ஜான் புக்கானன் அணி நிர்வாகத்தை சம்மதிக்க வைத்து கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்தார்.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

2009 ஐபிஎல் தொடரில் பிரென்டன் மெக்குல்லம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கங்குலியும் அணியில் இருந்தார். கங்குலி பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடியதை ரசிகர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுபுறம் கொல்கத்தா அணி சரிவை சந்தித்தது.

மோசமான நிலைமை

மோசமான நிலைமை

முதல் சீசனில் ஆறாம் இடம் பெற்ற கொல்கத்தா அணி, 2009 சீசனில் எட்டாம் இடம் பிடித்து மோசமான நிலைக்கு சென்றது. கேப்டனை மாற்றியும் அது எந்த பலனும் அளிக்கவில்லை. கங்குலி அந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடி 189 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

நாளடைவில் மோசமானது

நாளடைவில் மோசமானது

இது பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, கங்குலி, புக்கானன் உறவு துவக்கத்தில் நன்றாக இருந்து, நாளடைவில் மோசமானது. புக்கானன் பணியாற்றும் முறையும், கங்குலி செயல்படும் முறையும் வேறு வேறாக இருந்தது. புக்கானன் அவரை நீக்க முயற்சி செய்தார் என்றார்.

பயிற்சியாளர் மாற்றம்

பயிற்சியாளர் மாற்றம்

ஆனால், முதல் சீசனில் 6ஆம் இடம் பெற்று இருந்த அணி, கங்குலி கேப்டனாக இல்லாத போது எட்டாம் இடம் மட்டுமே பிடித்தது. அதனால், அந்த சீசனின் முடிவில் புக்கானன் அணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் 2010இல் கங்குலி கேப்டன் ஆனார்.

கூட்டம் கூட்டிய கோச்

கூட்டம் கூட்டிய கோச்

புக்கானனிடம் தனக்கு பிடிக்காத ஒரு விஷயம் பற்றியும் பேசினார் ஆகாஷ் சோப்ரா. புக்கானன் தன் நண்பர்கள், உதவியாளர்கள், முழு குடும்பம் என அனைவரையும் தன்னுடன் அழைத்து வந்ததாக கூறி இருந்தார். நிறைய பேர் அணியுடன் இருந்தது சரியாக அமையவில்லை என்றார் ஆகாஷ் சோப்ரா.

மோசமான வரலாறு

மோசமான வரலாறு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வரலாற்றில் புக்கானன் இருந்த நாட்கள் மோசமான வரலாறாக இருந்ததாகவும் அப்போது அணியில் இடம் பெற்ற ஆகாஷ் சோப்ரா கூறினார். இந்திய அணியிலும், ஐபிஎல் அணியிலும் கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களே நீக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 5, 2020, 12:52 [IST]
Other articles published on Jul 5, 2020
English summary
John Buchanan removed Ganguly as KKR captain says Akash Chopra.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X