பாரிஸ்டோ ஹாட்ரிக் சதம்.. இங்கிலாந்தை காப்பாற்றும் பிதாமகன்.. கிளைமாக்சில் பழிவாங்கிய கோலி

எட்ஜ்பாஸ்டன்: 2022ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் பாரிஸ்டோ தனது 5வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் தடுமாறிய இங்கிலாந்து அணியை மீண்டும் பாரிஸ்டோ தனது சதம் மூலம் சரிவிலிருந்து மீட்டார்.

பாரிஸ்டோ நியூசிலாந்துக்கு எதிரான கடைசியாக விளையாடிய 2 டெஸ்ட் போட்டியில், பாரிஸ்டோ சதம் விளாசினார்.

சூப்பர் மேன் போல் மாறிய பாரிஸ்டோ... கேப்டன் ஆனதும் பவர் வந்தது எப்படி? ஆடி போன ஸ்டோகஸ் - வீடியோசூப்பர் மேன் போல் மாறிய பாரிஸ்டோ... கேப்டன் ஆனதும் பவர் வந்தது எப்படி? ஆடி போன ஸ்டோகஸ் - வீடியோ

முதல் 13 பந்துகள்

முதல் 13 பந்துகள்

செம பார்மில் இருந்த பாரிஸ்டோ, இம்முறையும் இக்கட்டான நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் செய்ய வந்தார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்து வந்ததால் முதலில் பொறுமையாக பாரிஸ்டோ விளையாடினார். முதல் 13 ரன்களை எடுக்க பாரிஸ்டோ 63 பந்துகளை எடுத்து கொண்டார்.

கவுண்டர் அட்டாக்

கவுண்டர் அட்டாக்

முதலில் பேட்டிங்கில் அடித்தளத்தை அமைத்து கொண்டு செட்டான பாரிஸ்டோ, பிறகு அதிரடியை காட்ட தொடங்கினார். விராட் கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதமும், பாரிஸ்டோவுக்கு அடித்து ஆட வேண்டிய உத்வேகத்தை அளித்து இருக்கும். கேப்டன் ஸ்டோக்ஸ் மறுபுறம் ஆட்டமிழக்க, இங்கிலாந்தை மீட்க கவுண்டர் அட்டாக் இன்னிங்சில் பாரிஸ்டோ இறங்கினார்.

119 பந்துகளில் சதம்

119 பந்துகளில் சதம்

இதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. பாரிஸ்டோவை கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதன் மூலம் 63 பந்துகளில் 13 ரன்கள் என்ற இருந்த பாரிஸ்டோ, 119 பந்துகளில் சதம் விளாசினார். கடைசியாக பாரிஸ்டோ அடித்த 3 சதமும், 77, 95 மற்றும் 119 பந்துகளில் அடித்துள்ளார்.

பழித்தீர்த்த கோலி

பழித்தீர்த்த கோலி

பாரிஸ்டோ அடித்த 3 சதமும், இங்கிலாந்து தத்தளித்த போது அடித்து மீட்கப்பட்டதால் பிதாமகன் விக்ரம் போல் காட்சி அளிக்கும் பாரிஸ்டோ, உண்மையாகவே இங்கிலாந்து அணிக்கு பிதாமகனாக மாறிவிட்டார். இவ்வளவு செய்தும், கடைசியில் தாம் மோதலில் ஈடுபட்ட விராட் கோலியிடமே பிடிப்பட்டார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Johnny Baristow hattrick century made England avoid follow on பாரிஸ்டோ ஹாட்ரிக் சதம்.. இங்கிலாந்தை காப்பாற்றும் பிதாமகன்.. கிளைமாக்சில் பழிவாங்கிய கோலி
Story first published: Sunday, July 3, 2022, 19:23 [IST]
Other articles published on Jul 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X