For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சின்ன தலைக்கு என்ன ஆச்சு? காலில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் ரெய்னா.. அக்கறை காட்டிய ஜாண்டி ரோட்ஸ்!

மும்பை : கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலில் கட்டுடன் இருக்கும் ரெய்னாவுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார் ஜாண்டி ரோட்ஸ்.

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னா உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்.

அணியில் வாய்ப்பு இல்லை

அணியில் வாய்ப்பு இல்லை

கடந்த ஆண்டில் ஒரீரு சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு பெற்றார். பின்னர் அதுவும் மறுக்கப்பட்டது. இந்திய அணியில் வாய்ப்பு இல்லாத நிலையில் இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. எனினும், ஐபிஎல் தொடரில் அவருக்கு மவுசு குறையவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ரெய்னா.

காலில் அறுவை சிகிச்சை

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

வாரக்கணக்கில் ஓய்வு

வாரக்கணக்கில் ஓய்வு

மருத்துவர்கள் வழிகாட்டுதலின் படி சுமார் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை சுரேஷ் ரெய்னா ஓய்வில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தான் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் அறிவுரை கூறி இருக்கிறார்.

ஜாண்டி ரோட்ஸ் அறிவுரை

அவர் கூறுகையில், ரெய்னா நீங்கள் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளில் உங்கள் வேலையில் கடைபிடித்த தொழில் தர்மத்தின் மூலம் பலரையும் ஈர்த்து இருக்கிறீர்கள். இப்போது உங்கள் உடல் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் நண்பரே! உங்களைப் பற்றி தெரியும் என்பதால் கூறுகிறேன், நாளையே நீங்கள் பயிற்சி செய்ய விரும்புவீர்கள் என் கூறி உள்ளார்.

பீல்டிங் தொடர்பு

பீல்டிங் தொடர்பு

ரெய்னா அணியில் இடம் பெற்றாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார் என்பதை தான் இப்படி கூறி இருக்கிறார் ஜாண்டி ரோட்ஸ். சிறந்த பீல்டரான ஜாண்டி ரோட்ஸ், சுரேஷ் ரெய்னாவை எப்போதும் சிறந்த பீல்டர்கள் வரிசையில் முதல் இடத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் வாங்க ரெய்னா

சீக்கிரம் வாங்க ரெய்னா

அறுவை சிகிச்சை முடிந்து இருக்கும் நிலையில், அடுத்த சில வாரங்கள் ரெய்னா முற்றிலும் ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பின் தான் படிப்படியாக கிரிக்கெட் பயிற்சிகள் செய்யத் தொடங்கலாம். சீக்கிரம் வாங்க ரெய்னா.. அடுத்த ஐபிஎல்-ல கலக்குங்க!

Story first published: Saturday, August 10, 2019, 19:32 [IST]
Other articles published on Aug 10, 2019
English summary
Jonty Rhodes asks Suresh Raina to listen his body after knee surgery.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X