For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்ஆர் ஓபனிங்... ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்... இல்லன்னா போச்சு...இயான் மார்கன் சொல்லியிருக்காரு!

டெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்த சீசனில் பொறுப்பேற்றுள்ளார் சஞ்சு சாம்சன்.

இந்நிலையில் அந்த அணியின் துவக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கி விளையாடுவார்கள் என்று கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் முக்கிய வீரருக்கே கொரோனா... ஓப்பனிங்கிற்கே சிக்கல்... முதல் போட்டிக்கே பின்னடைவு! ஆர்சிபி அணியின் முக்கிய வீரருக்கே கொரோனா... ஓப்பனிங்கிற்கே சிக்கல்... முதல் போட்டிக்கே பின்னடைவு!

அவர்கள் விளையாடுவது மிகவும் சிறப்பானது என்றும் ஆனால் எதிரணி கேப்டனாக தன்னுடைய அணியின் பௌலிங்கை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்டோக்ஸ் குறித்து மார்கன்

ஸ்டோக்ஸ் குறித்து மார்கன்

கடந்த சீசனின் இடையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன். இந்த சீசனிலும் அதை தொடரவுள்ளார். இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்சிற்காக பேசிய மார்கன், ராஜஸ்தான் ராயல்சின் பென் ஸ்டோக்ஸ் இந்த சீசனில் அதிகமான வாய்ப்புகளை பயன்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

இயான் மார்கன் கருத்து

இயான் மார்கன் கருத்து

இந்த சீசனில் ஜோஸ் பட்லருடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் துவக்க வீரராக களமிறங்குவார் என்றும் மார்கன் தெரிவித்துள்ளார். கடந்த இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் மிடில் ஆர்டரில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லில் துவக்க வீரராக விளையாடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

அவ்வாறு ராஜஸ்தான் ராயசில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் துவக்க வீரர்களாக களமிறங்கும் நிலையில் எதிரணி கேப்டனாக தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் தன்னுடைய அணியின் பௌலிங்கை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் துவக்க வீரர்கள்

இங்கிலாந்தின் துவக்க வீரர்கள்

முதல் 3 இடங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் இங்கிலாந்தில் அதிகமான வீரர்கள் உள்ளதாகவும் மார்கன் தெரிவித்துள்ளார். ஆனால் இறுதி 10 ஓவர்களே அணியின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பேற்றுள்ளார்.

Story first published: Sunday, April 4, 2021, 10:51 [IST]
Other articles published on Apr 4, 2021
English summary
England have plenty of candidates who can play in the top three -Eoin Morgan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X