For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜோஸ் பட்லரின் 'ஆல் டைம் ஐபிஎல் XI'.. கடுப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் - காரணம் என்ன?

சென்னை: இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தனது ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வீசும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக தொற்று உறுதி செய்யப்பட, அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா பரவத் தொடங்கியது.

கோடிகளில் புரண்டாலும்.. எதுவும் உதவலையே - மரண பயம் காட்டிய கொரோனாகோடிகளில் புரண்டாலும்.. எதுவும் உதவலையே - மரண பயம் காட்டிய கொரோனா

இதனால் பதறிய பிசிசிஐ, தொடரை உடனே நிறுத்த, ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டனர். மற்ற வீரர்கள் அவரவர் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய வீரர்களும் இன்று சிட்னி சென்றடைந்தனர்.

தொடரும் ஆலோசனை

தொடரும் ஆலோசனை

இந்த நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடரை எப்போது தொடங்குவது என்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், இங்கு மீண்டும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியும், 'இந்தியாவில் மீண்டும் தொடர் நடத்த வாய்ப்பில்லை' என்று உறுதிப்படுத்திவிட்டார். அதேசமயம், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை வாரியங்கள் தொடரை மீண்டும் நடத்த ஆர்வமுடன் உள்ளன.

சர்வதேச வீரர்கள்

சர்வதேச வீரர்கள்

அதேசமயம், அக்டோபரில், டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்தியாவில் தான் இத்தொடர் நடத்தப்பட உள்ளது. ஆனால், இந்தியாவின் தற்போதையை நிலையில் உலகக் கோப்பைக்கும் வாய்ப்பில்லை என்பதால், ஒட்டுமொத்த போட்டிகளையும் அமீரகத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால், மீதமிருக்கும் 31 ஐபிஎல் போட்டிகளையும், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நடத்தலாமா, அல்லது அதற்கு பின் நடத்தலாமா என்பதில் இழுபறி நீடிக்கிறது. உலகக் கோப்பைத் தொடருக்கு முன் நடத்த வேண்டுமெனில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி சவாலானதாக இருக்கும். முக்கிய அணிகளுக்கு அடுத்தடுத்து தொடர்கள் இருப்பதால், சர்வதேச போட்டிகளை ஒதுக்கிவிட்டு, அந்தந்த நிர்வாகங்கள் ஐபிஎல்-லுக்கு வீரர்களை அனுப்புமா? என்பது பெரும் சந்தேகமே.

ஜோஸ் பட்லர் டீம்

ஜோஸ் பட்லர் டீம்

இந்த நிலையில், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், தனது ஆல் டைம் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். அதில், ஜோஸ் பட்லர், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், எம்.எஸ். தோனி (WK), பொல்லார்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தோனி விக்கெட் கீப்பர்

தோனி விக்கெட் கீப்பர்

ஜோஸ் பட்லர் லிஸ்டில், மிஸ்டர்.ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. தொடரில் இதுவரை 5,491 ரன்கள் குவித்துள்ள ரெய்னா தான், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் 'சின்ன தல' என்று அழைக்கப்படும் ரெய்னா ஒரு பெஸ்ட் ஃபீல்டரும் கூட. ஸ்டிரைக் ரேட், ஆவரேஜ், ரன்கள் என அனைத்திலும் டாப் லிஸ்டில் ஒருவராக இருக்கும் ரெய்னாவுக்கே ஆல் டைம் அணியில் இடமில்லை என்றால் எப்படி பாஸ்? அதேபோல், 'யுனிவர்சல் பாஸ்' என்றழைக்கப்படும் க்றிஸ் கெயிலுக்கும் அணியில் இடமில்லை. மும்பை கேப்டன் ரோஹித், சென்னை கேப்டன் தோனி, பெங்களூரு கேப்டன் விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் அணியில் உள்ளார். ஆல் ரவுண்டர்களாக பொல்லார்ட், ஜடேஜா ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் ஸ்பின் ஆப்ஷனுக்கும், பும்ரா, மலிங்கா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இடம் பிடித்துள்ளனர்.

Story first published: Monday, May 17, 2021, 18:48 [IST]
Other articles published on May 17, 2021
English summary
jos buttler announced all time ipl playing xi - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X