இவரு ஆடுறத பாத்தா சச்சின் மாதிரியே இருக்குது.. அந்த வீரரை புகழ்ந்து தள்ளும் இந்த கோச்

லண்டன்:ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்திறனை பார்த்தால், சச்சினை பார்ப்பது போலவே இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் புகழ்ந்திருக்கிறார்.

இன்னும் 10 நாட்கள் தான் பாக்கி இருக்கின்றன... உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க. இறுதிகட்ட பரபரப்பில் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் உள்ளனர். பயிற்சி ஆட்டங்களும் ஒருசில நாட்களில் துவங்குகின்றன.

இந்நிலையில், அவர் இப்படி ஆடுவார்...இவர் முத்திரை பதிப்பார் என்று முன்னாள், இன்னாள் ஜாம்பவான்களின் களம் புகுந்து கருத்துகளை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அதில் லேட்டஸ்ட் வரவு ஆஸி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அவர் கூறியதை பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பயிற்சி போட்டிகள்

பயிற்சி போட்டிகள்

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம், சச்சினை போன்றே இருக்கிறது என்று வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்கிறார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: உலக கோப்பை தொடருக்கு முந்தைய, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 பயிற்சி போட்டிகளை நான் உன்னிப்பாக கவனித்தேன்.

சந்தோஷம்

சந்தோஷம்

அந்த போட்டிகளில் ஸ்மித்தின் பேட்டிங் என்னை வியப்படைய வைத்தது. ஓராண்டு தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பியிருக்கும் ஸ்மித் தற்போது பார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. மேலும், இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக திகழ்வார்.

சச்சின் தான் அவர்

சச்சின் தான் அவர்

மேலும், தற்போது முதிர்ச்சி அடைந்துள்ள ஸ்மித்தின் பேட்டிங், மாஸ்டர் பிளாஸ்டர் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துகிறது. சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் நுணுக்கங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

தடை விதிக்கப்பட்டது

தடை விதிக்கப்பட்டது

அது போன்றே தற்போது ஸ்மித் அபாரமாக ஆடி வருகிறார். அவரது இந்த ஆட்டம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பிரதிபலிக்கும் என்று கூறினார். ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்திய எழுந்த குற்றச்சாட்டின் ஓராண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டவர் தான் இந்த ஸ்மித். அந்த தடை அண்மையில் தான் முடிந்து ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றார்.

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்
Match 33 - June 26 2019, 03:00 PM
நியூசிலாந்து
பாகிஸ்தான்
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Justin Langer praises Steve Smith that his batting like Sachin.
Story first published: Monday, May 20, 2019, 10:54 [IST]
Other articles published on May 20, 2019
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more