For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய பௌலர்கள் பத்தி எங்களுக்கு "ஏ டு இசட் " தெரியும்... பாத்துக்கலாம்.. லாங்கர் திட்டவட்டம்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடர்கள் வரும் வெள்ளிக்கிழமை துவங்கி ஜனவரி 19ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் வெற்றி பெறுவது குறித்து இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்திய பௌலர்களிடம் அதிக மரியாதை உள்ளது, ஆனால் இந்திய பௌலர்கள் குறித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிகமாக தெரியும், ஜஸ்டின் லாங்கர் உறுதி

வெள்ளிக்கிழமை துவக்கம்

வெள்ளிக்கிழமை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டித் தொடர்கள் நாளை மறுதினம் முதல் துவங்கி ஜனவரி 19ம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதற்கென இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018-19 டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் தற்போது இந்த தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது.

மரியாதை உள்ளது

மரியாதை உள்ளது

இந்நிலையில் இந்திய பௌலர்களிடம் மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அவர்களின் பௌலிங் ஆர்டர் மிகவும் சிறப்பானது என்றும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கும் சவால்கள் அனைத்தையும் ஏற்கனவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தெரிந்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான சோனிக்கு அளித்த பேட்டியில் பேசிய லாங்கர், இந்திய அணியின் உலகத்தரத்திலான பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா என்று கூறியுள்ளார். அவருடன் முகமது ஷமி இருவரும் சிறப்பான கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் மற்றும் சில தொடர்களில் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பானது என்றும் கூறினார்.

கவலை கொள்ளவில்லை

கவலை கொள்ளவில்லை

இந்த தொடரில் ரோகித் மற்றும் இஷாந்த் இல்லாதது குறித்தெல்லாம் தாங்கள் கவலை கொள்ளவில்லை என்றும் மற்ற வீரர்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் தயாராகியுள்ளதாகவும் லாங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் பௌலிங் குழு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Story first published: Wednesday, November 25, 2020, 17:26 [IST]
Other articles published on Nov 25, 2020
English summary
The coach Langer took pride in the bowling resources of his team, describing them as great
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X