For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒலிம்பிக் பேட்மிண்டன்.. ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஹாட்ரிக் தோல்வி !

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியடைந்தது. இந்த ஜோடிக்கு இது 3-வது தொடர் தோல்வியாகும்.

மகளிருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டிகள் 4 பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜூவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி, தாய்லாந்து ஜோடியை எதிர்கொண்டது.

Jwala Gutta-Ashwini Ponnappa end Rio Olympics campaign without a win

இந்த போட்டியில் தாய்லாந்து ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்தது. இதன் மூலம் ஒலிம்பிக் பேட்மின்டன் தொடரில் இருந்து வெளியேறியது.

முன்னதாக நடந்த முதல் சுற்று போட்டியில் உலகின் நம்பர் 1 ஜோடியான ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ மற்றும் அயாகா டகசாகி ஜோடியிடம், இந்திய ஜோடி 15-21, 10-21 என்ற நேரடி செட் கணக்கில் தோற்றுப் போனது. அடுத்து நெதர்லாந்தின் செலினா பைக் மற்றும் மஸ்கின் ஜோடியுடன் தோல்வியை சந்தித்திருந்தது.

Story first published: Sunday, August 14, 2016, 1:48 [IST]
Other articles published on Aug 14, 2016
English summary
India's women's badminton doubles pair of Jwala Gutta and Ashwini Ponnappa lost their inconsequential Group A match against Puttita Supajirakul and Sapsiree Taerattanachai of Thailand to bow out of the Olympic Games here on Saturday (August 13).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X