For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ரெக்கார்டு.. ஜாம்பவான்கள் வரிசையில் இடம் பிடித்த இளம் வீரர்.. மைல்கல் சாதனை!

கராச்சி : தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

உலகிலேயே இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில் நான்காம் இடம் பிடித்துள்ளார் அவர்.

மேலும், பல்வேறு சாதனைகளையும் படைத்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

200வது டெஸ்ட் விக்கெட்

200வது டெஸ்ட் விக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ஹசன் அலி விக்கெட்டை வீழ்த்தினார் காகிசோ ரபாடா. அது அவரது 200வது டெஸ்ட் விக்கெட் ஆகும்.

எத்தனை போட்டிகள்?

எத்தனை போட்டிகள்?

44 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் ரபாடா. தென்னாப்பிரிக்க அணியில் இருந்து 200க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய எட்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், இளம் வயதில் இந்த சாதனையை செய்தவர் கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இளம் வயதில்..

இளம் வயதில்..

25 வயதில் 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருக்கும் ரபாடா, இளம் வயதில் இந்த சாதனையை செய்தவர்கள் பட்டியலில், வக்கார் யூனிஸ், கபில் தேவ், ஹர்பஜன் சிங் வரிசையில் நான்காம் இடம் பெற்றுள்ளார். குறைந்த பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதிலும் சாதனை படைத்துள்ளார்.

குறைந்த பந்துகளில்..

குறைந்த பந்துகளில்..

காகிசோ ரபாடா 8154 பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். குறைந்த பந்துகளில் இந்த சாதனையை செய்தவர்கள் பட்டியலில் ரபாடா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். வக்கார் யூனிஸ் 7730 பந்துகளிலும், டேல் ஸ்டெய்ன் 7848 பந்துகளிலும் 200 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

எட்டாம் இடம்

எட்டாம் இடம்

ரபாடா 75 ஒருநாள் போட்டிகளில் 117 விக்கெட்களும், 26 டி20 போட்டிகளில் 31 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். தென்னாப்பிரிக்க அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறார் ரபாடா.

Story first published: Thursday, January 28, 2021, 15:39 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Kagiso Rabada enters elite list after getting 200 test wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X