For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காற்றைவிட வேகமாக பரவும் கொரோனா... ஆஸி. வீரர் கேன் ரிச்சர்ட்சனையும் பாதித்தது!

சிட்னி : தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்க அணி ஒயிட்வாஷ் செய்தது.

Recommended Video

ஆஸி.வீரருக்கு கொரோனா அறிகுறி ? அச்சத்தில் வீரர்கள்

இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு தொண்டை வலி காரணமாக, அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை 3 போட்டிகளிலும் வென்று ஒயிட்வாஷ் செய்துள்ளது. இதையடுத்து தற்போது தன்னுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் சர்வதேச ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

ரசிகர்கள் இல்லாத போட்டி

ரசிகர்கள் இல்லாத போட்டி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் தொடரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, யாருமற்ற மைதானத்தில் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இன்று துவங்கியுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

பரிசோதனைகள் தீவிரம்

பரிசோதனைகள் தீவிரம்

இதனிடையே, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு தொண்டையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

சாதாரண சிகிச்சை

சாதாரண சிகிச்சை

இந்நிலையில் ரிச்சர்ட்சன்னுக்கு தற்போதுவரை சாதாரண சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சோதனையை அடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Friday, March 13, 2020, 12:38 [IST]
Other articles published on Mar 13, 2020
English summary
Kane Richardson has been tested for the new coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X